பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 429 சர்பி, ததி, துக்தா, ஜலா ஆகியவற்றைப் படைத்தார். ஏழு துவீபங்கள் படைக்கப்பட்டன. இவற்றை அடுத்து ஏழு லோகங்களும், ஏழு கீழ் லோகங்களும் படைக்கப்பட்டன. இவை அனைத்தும் சேர்ந்ததே பிரம்மாண்டம் என்னும், மிகப்பெரிய வடிவத்தைக் கொண்ட முட்டை ஆகும். எண்ணிலடங்கா முட்டைகள், நுண்மையான வடிவத்துடன், விஷ்ணுவின் உடலில் உள்ளது. ஆனால் அவ்வுலகங்கள் அனைத்தும் நிலையில்லாத, பொய்யான தோற்றமுடைய கனவுகள் போன்றவையாகும். என்றும் அழிவில்லாத நிலைத்து நிற்கக் கூடிய லோகங்கள் வைகுந்த லோகம், சிவலோகம், கோலோகம் எனப்படும். பிரம்மாவின் மனைவி சாவித்திரி. நான்கு வேதங்களையும், முப்பத்தி ஆறு ராகினிகளையும் தாயாக இருந்து கவனித்துக் கொண்டார். இதன் பிறகே காலத்தைக் குறிக்கும் அளவுகள் படைக்கப்பட்டன. பிரம்மனின் கொப்பூழில் இருந்து, தேவ தச்சனான விஸ்வகர்மா தோன்றினார். அவரை அடுத்து அஷ்ட வசுக்கள் தோன்றினர். தன்னுடைய மனவலிமையால் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய முனிவர்களைப் படைத்தார். இவர்களிடம் படைக்கும் தொழிலை ஏற்றுச் செய்யும்படிக் கூற அவர்கள் மறுத்து விட்டனர். அவர்கள் கூறிய பதிலைக் கேட்ட பிரம்மன் சினம் கொண்டு தன் நெற்றி யினின்று அக்னியை வெளியேற்றினார். அந்த அக்னியில் இருந்து ருத்ரன், அழிக்கும் தொழிலைச் செய்வதற்காகத் தோன்றினார். பிரம்மனின் உடம்பில் இருந்து பல்வேறு முனிவர்கள் தோன்றினர். இம் முனிவர்களிடம் படைக்கும் தொழிலை ஏற்றுக்கொள்ளும்படிக் கூற நாரதர் மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், நாரதரைப் பார்த்து "துன்மார்க்க குணம் கொண்ட கந்தர்வனாகவும் பரப்பிரம்மம் பற்றிய