பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பதினெண் புராணங்கள் பெருமையை அறிந்த சிவன், விசுவநாதராக அங்கேயே தங்கிவிட்டார். 8. திரியம்பகமும் கெளதமனும் நாட்டின் தென்பகுதியில் பிரம்ம பர்வதம் என்ற ஒரு மலை இருந்தது. அதன் ஒரு பகுதியில் கெளதம முனிவரும், அவன் மனைவி அகல்யையும் தவம் செய்து கொண்டிருந்தனர். பல ஆண்டுகளாக மழை இன்மையால் காடெல்லாம் கரிந்து சாம்பலாகும் நிலை வந்தது. அப்பொழுது கெளதமரும், அகல்யையும் வருணனைக் குறித்துத் தவம் செய்தனர். வருணன் எதிர்ப்பட்டவுடன் "நாடு முழுவதும் மழை பெய்ய வேண்டும்” என்று வரம் கேட்டார். வருணன் "அது தன்னுடைய சக்திக்கு அப்பாற்பட்டது” என்றும், "தன்னால் முடிந்தது ஒரு நீர் நிறைந்த குளம் அங்கு இருக்குமாறு செய்வதுதான்” என்றும் கூறினான். நீர் நிறைந்த குளம் உண்டாயிற்று. இந்தக் குளத்தை ஏனைய முனிவர்களும் பயன்படுத்தி வந்தனர். கெளதமரின் சீடர்களும் தண்ணிர் கொண்டுவரச் சென்று மிகவும் காலம் தாழ்த்தி வந்தனர். ஏன் என்று முனிவர் கேட்டபொழுது ரிஷிகளின் மனைவிமார்கள் தங்களைத் தண்ணிர் எடுக்க விடுவதில்லை என்று கூறினர். அன்றிலிருந்து அகலிகையே தண்ணிர் கொண்டுவரப் புறப்பட்டாள். அவளையும் அப் பெண்கள் எளிதில் நீர் எடுக்க விடவில்லை. அவளையும், கெளதமரையும் அந்த இடத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும் என்று மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்களை நச்சரித்தனர். வேறு வழியில்லாமல் முனிவர்கள் கணேசனை நோக்கி வேண்டினர். கணேசன் வந்த பொழுது கெளதமரையும், அகல்யையையும் அந்த எல்லையை விட்டுப் போக வேண்டுமென்று வேண்டிக் கொண்டான். அந்த வேண்டுகோள் தவறானது என்பதை அறிந்த கணேசன், இவர்களுக்கு புத்தி கற்பிப்பதற்காகத் தானே ஒரு பசுமாட்டு