பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 பதினெண் புராணங்கள் அந்தச் சண்டாளன். பழைமையில் ஊறிய அரிச்சந்திரன், ஒரு கூடித்திரியன் ஒரு சண்டாளனுக்கு அடிமை ஆவதை விரும்பாமல் இருந்தான். பொழுது செல்லச் செல்ல வேறு வழி இல்லாததால் சண்டாளனுக்குத் தன்னை விற்க முடிவு செய்தான். அந்த நிலையில் அங்கு வந்த விசுவாமித்திரர், சண்டாளனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடன் தீர்ந்தது என்று கூறிப் போனார். சண்டாளனுடன் சென்ற அரிச்சந்திரன் தனக்குரிய பணி யாது, ஊர் யாது என்பதை அறிந்து கொண்டான். பிணத்தைச் சுட வருகின்றவர்கள் கொடுக்கும் தொகையில் ஆறில் ஒரு பங்கு அரசனுக்குரியதாகும். அரைப் பங்கு சண்டாளனுக்கும், மூன்றில் ஒரு பங்கு அரிச்சந்திரனுக்கும் கொடுக்கப்படும். மி கக் கொடுமையானதும், பேய் பிசாசுகளின் உறைவிடம் ஆனதும், நரிகள் போன்றவற்றின் உறைவிடமும் ஆன அந்த மயானத்தில், அரிச்சந்திரன் பன்னிரண்டு மாதங்களைக் கழித்தான். ஒரு நாள் இன்னும் பன்னிரண்டு வருடங்கள் அங்கேயே இருந்த பிறகுதான் தனக்கு விடுதலை கிட்டும்' என்று கனவு கண்டான். இந்தக் கனவின் பயனாக மறுநாள் மனங்கலங்கி, தான் யார் என்பதைக் கூட மறந்து வாழத் தொடங்கினான். அந்த நிலையில் அவன் மகன் ரோஹித்வஷாவைப் பாம்பு கடித்துவிட அவன் உடலை எரிப்பதற்காக ஷைவ்வியா கொண்டு வந்தாள். மனங்கலங்கித் தன்னையே அறியாமல் இருந்த அரிச்சந்திரனுக்கு அது யாருடைய பிணம் என்றோ, அதைக் கொண்டு வந்தவள் யார் என்றோ தெரியவில்லை. வெகு நேரம் கழித்துத்தான் அவர்கள் யார் என்று அவனும், அவன் யார் என்று அவன் மனைவியும் அறிந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு 'ஒ' என்று கதறினர். மகனையும் இழந்த நிலையில் வாழப் பிடிக்காமல் அவர்கள் இருவரும் நெருப்பில் வீழ்ந்து உயிர்