பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 பதினெண் புராணங்கள் அந்த வேல் சென்றது. வேல் துவாரமிட்ட இடத்தில் தண்ணர் குபுகுபுவென்று பாய்ந்தது என்றும் கூறுகிறது வெற்றி பெற்ற ஸ்கந்தனைப் பார்வதி மடியில் எடுத்து வைத்துக் கொண்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். பிரலம்பன் போர் தாரகனுடன் சண்டை ஆரம்பித்தவுடன் அவன் படையைச் சேர்ந்த பிரலம்பன் என்ற அசுரன் பாதாளலோகம் (நாக லோகம்) சென்று அங்கிருந்து பாம்புகளைக் கொன்று கொண்டிருந்தான். நாகலோகத்திற்கு உரியவனான சேஷனும், அவன் உடன் இருந்தவர்களும் ஸ்கந்தனைப் பார்க்க தேவ ருலகம் வந்து விட்டனர். இந்த நிலையில் நாகர்கள் கொல்லப் படுவதைக் குமுதா என்பவன் சேஷனிடம் கூறினான். சேஷன் முருகனை வேண்டிக் கொள்ள முருகன் இங்கிருந்தபடியே வேலை ஏவ, அது நாகலோகம் சென்று பிரலம்பனைக் கொன்றது. இப்பணி முடித்த முருகனுடைய வேல் பாதாள லோகத்தில் தோன்றிப் பாதாள கங்கையில் குளித்துவிட்டு முருகனிடம் வந்து சேர்ந்தது. வேலினால் உண்டாக்கப்பட்ட ஆற்றிற்கு ‘சித்தகுபா என்று ஸ்கந்தன் பெயரிட்டார். வலா என்ற அசுரனின் மகனாகிய வனா என்பவன் முருகனுக்கு பயந்து கிரெளஞ்ச மலையை அடைந்து அதில் ஒளிந்திருந்தான். கிரெளஞ்ச மலையில் வனாவைப் போன்ற கொடியவர்கள் பலர் மறைந்து வாழ்ந்து வந்தனர். முருகன் வேலை ஏவ, அதனால் கிரெளஞ்சம் துளைக்கப்பட்டபொழுது வனா முதலிய அசுரர்கள் கொல்லப்பட்டனர். இந்த இரு கதைகளும் விஷ்ணு புராணத்தில் இடம் பெற்றுள்ள கதைகளாகும். அங்கு இவர்கள் இருவரையும் கிருஷ்ணன் கொன்றான் என்று சொல்லப்படுகிறது. எல்லாப் புராணங் களில் இருந்தும் அதிக மாற்றம் செய்யாமல் கதைகளை