பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 125 கண்ணன் மரத்தை வேரோடு பறித்து கருடன் முதுகில் வைத்து விட்டார். அந்த மரம் இந்திரன் மனைவியாகிய சச்சிக்குச் சொந்தமானது என்பதால் அவள் கடும் கோபமுற்றாள். கிருஷ்ணனும் சத்தியபாமாவும் வெறும் மனிதர்கள் என்று நினைத்த அவள், தேவர்களையும் இந்திரனையும் ஏவி கிருஷ்ணனுடன் போர் புரியச் செய்தாள். தேவர்கள், குபேரன், அக்னி, எமன், வருணன், மிருத்துக்கள், அஸ்வினிக்கள் ஆகிய அனைவரும் கண்ணனிடம் தோற்று ஓடினார்கள். இறுதியாக இந்திரன் வஜ்ராயுதத்தை எடுத்து விட்டான். கிருஷ்ணன் சக்கரத்தை ஏந்தியவுடன் தேவர்களே கலங்கினார்கள். இந்திரன் வஜ்ராயுதத்தை கிருஷ்ணன்மேல் ஏவினான். கிருஷ்ணன் சக்கரத்தை ஏவாமல் வஜ்ராயுதத்தை ஒரு கையால் பிடித்து விட்டான். உடனே இந்திரன் கிருஷ்ணன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். கிருஷ்ணன், வஜ்ராயுதத் தையும் பாரிஜாத மரத்தையும் திருப்பிக் கொடுத்தான். இந்திரன் வஜ்ராயுதத்தை மட்டும் வாங்கிக் கொண்டு இந்த மரம் துவாரகையிலேயே இருக்கட்டும். கிருஷ்ணன் இறந்த பிறகு அது தானே தேவலோகம் வந்துவிடும்’ என்று சொன்னான். கிருஷ்ணனின் பதினாறு ஆயிரம் மனைவியர்க்கு ஒர் இலட்சத்து எண்பது ஆயிரம் மக்கள் தோன்றினர். அவருள் ருக்மணியின் மகனான பிரத்யும்னன் முக்கியமானவன். அவன் ருக்மியின் மகளை மணந்து அவனுக்கு அநிருத்தன் என்ற மகன் இருந்தான். இதனிடையில் மகாவலியின் மகனாகிய வனாசுரனுக்கு உஷா என்ற பெண் இருந்தாள். ஒருமுறை உஷா, மகாதேவனையும் பார்வதியையும் வணங்கி, எனக்கு எப்படிப்பட்ட கணவன் வருவான் என்று கேட்டாள். பார்வதி, வைகாசி மாதப் பெளர்ணமி அன்று உன் கனவில் ஒருவன் காட்சி அளிப்பான். அவனே உன் மணாளன் ஆவான்