பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 பதினெண் புராணங்கள் ஆண்டுகள் கடுந்தவம் செய்தான். அதன்பிறகு கன்வ முனிவரைக் காண வந்தான். முனிவர் 'துர்ஜயா! நீ செய்த தவத்தால் ஒரளவு உன் பாவம் நீங்கியது உண்மைதான். அந்த மிகக் கொடிய பாவத்தின் ஒரு பகுதி இன்னமும் உள்ளது. அதைப் போக்க வேண்டுமானால் நீ வாரணாசிக்குச் சென்று சிவனை நோக்கித் தவம் செய். அப்பொழுது உன் பாவம் முழுவதுமாக நீங்கும்” என்று கூற, துர்ஜயன் வாரணாசி சென்று சிவனை நோக்கித் தவம் செய்து தன் பாவங் களினின்று விடுதலை அடைந்தான். எத்தகைய பாவத்தையும் போக்கவல்லது வாரணாசி என்ற தனிச் சிறப்பை உடைய நகரம் என்பதை இதன் மூலம் அறியலாம். கிருஷ்ணன் தவம் வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது பிள்ளையாகப் பிறந்தவர் கிருஷ்ணன். அவதாரங்களுள் ஒன்றாகும். நீண்ட நாட்கள் தனக்குப் பிள்ளை இல்லை ஆதலால் கிருஷ்ணன் உபமன்யு முனிவரைச் சந்திக்கச் சென்றார். கங்கைக் கரையிலுள்ள உபமன்யு முனிவரின் ஆசிரமம் மிக்க அழகுடன் விளங்கிற்று. எங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கின. வேத கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மிகக் கொடிய வன விலங்குகளும் அந்த ஆசிரமத்தின் பக்கத்தில் வந்தவுடன் சாதுவாக மாறிவிட்டன. உடமன்யு முனிவரைக் காண பல இடங்களில் இருந்தும் முனிவர்கள் வந்து போயினர். அந்த ஆசிரமத்துக்குள் கிருஷ்ணன் நுழைந்து எல்லா முனிவர் களையும் வணங்கினார். கிருஷ்ணன் யார் என்பதை நன்கறிந்திருந்த அம்முனிவர்கள்- உபமன்யு முனிவர் உள்பட கிருஷ்ணனை வணங்கினர். உபமன்யு முனிவர் “கிருஷ்ணா! தாங்கள் விஷ்ணுவின் அவதாரம் என்பதை நாங்கள் அறிவோம். எல்லோரும் உங்களை நாடி உங்களிடம் வரத்