பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 பதினெண் புராணங்கள் மாடு இடைவிடாமல் குரல் கொடுத்தால், வீட்டுத் தலைவனுக்கு ஆபத்து. இது இரவு நேரத்தில் நடந்தால், திருட்டு அல்லது வீட்டிலுள்ளோர்க்கு மரணம் சம்பவிக்கும். பசு புறாவுடன் விளையாடினால் பசுவிற்கு மரணம் ஏற்படும். யானை தன் வலக் காலை, இடக்காலால் தேய்த்தால் நல்ல சகுனமாகும். யானை தன் காலினால் வலப் பக்க தந்தத்தைத் தேய்க்குமானால், வளமை பெருகும். ஒருவர் பிரயாணம் புறப்படும் பொழுது குடை கீழே விழுமானால், பிரயாணத் தைத் தவிர்ப்பது நல்லது. நல்ல நட்சத்திரங்கள் இருக்கும் நாளிலேயே பிரயாணம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நட்சத்திரங்கள் இருக்கும் நாளில் பிரயாணத்தைத் தவிர்ப்பது நல்லது. போர் ஒர் அரசன் போருக்குப் புறப்படுவதானால், புறப்படு வதற்கு ஏழு நாட்கள் முன்னர் தொடங்கி பின்வரும் முறையில் ஒவ்வொரு நாளும் சொல்லப்பட்ட தேவதைகளைப் பூசிக்க வேண்டும். முதல் நாள்- சிவன், விஷ்ணு, கணேசன், இரண்டாம் நாள்- திக்பாலர்கள் மூன்றாம் நாள்- ஏகாதச ருத்ரர்கள். நான்காம் நாள்- கோள்களும், விண்மீன்களும்; ஐந்தாம் நாள்- அஸ்வினி தேவதைகள், புண்ணிய நதிகள்; ஆறாம் நாள்- எதிர்பார்க்கப்படும் வெற்றியை மனத்துள் கொண்டு, சடங்குகளுடன் கூடிய அபிஷேகம் அரசனுக்குச் செய்யப்பட வேண்டும்; ஏழாம் நாள்- போருக்குப் போருக்குப் புறப்படும் படைகள், தலைநகரத்துக்குக் கிழக்குத் திசையில் கூட வேண்டும். படைகள் புறப்படும்போது அப்படைகளுக்கு முன்னர் இசை முழக்குவோர் செல்ல ண்டும். புறப்பட்ட படை முன்னோக்கிச் செல்ல வேண்டுமே