பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 பதினெண் புராணங்கள் கொட்டிலுக்குச் சென்று ஆடு என்று நினைத்து கன்றுக் குட்டியை வெட்டிவிட்டாள். பசுங்கன்று என்று தெரிந்த பின்பும், அதில் ஒரு பகுதியைச் சமைத்துச் சாப்பிட்டாள். எஞ்சிய கன்றின் உடம்பைத் துார எறிந்துவிட்டு, கன்று எங்கே என்று கேட்பாருக்கு 'சிவசிவ கன்றுக்குட்டியைப் புலி தின்று விட்டதே! என்று கூறினாள். அதன் பிறகு அவள் தீண்டாதார் குலத்தில் பிறந்தாள். பிறப்பில் இருந்தே நோயும், நொடியும் அவளை வாட்டின. ஒருமுறை திருக்கோகர்ணம் செல்லும் யாத்திரிகர்களைப் பின்தொடர்ந்தாள். அவர்கள் பிச்சை போடுவார்கள் என்று நினைத்த அவளுக்குக் கை நிறைய வில்வத்தைக் கொடுத்து விட்டனர். பலநாள் பட்டினி இருந்த அவள், மிகுந்த ஆத்திரத்துடன் அந்த வில்வத்தை எறிந்தாள். எங்கோ மறைவில் இருந்த லிங்கத்தின் மேல் வில்வம் விழுந்தது. முற்பிறவியில் சிவசிவா என்று சொன்னதாலும், இப்பிறவியில் பட்டினி கிடந்து வில்வத்தை லிங்கத்தின் மேல் போட்டதாலும் அவள் சிவலோகம் வருகிறாள் என்று சில கணங்கள் சொன்னார்கள் என்று கூறி திருக்கோகர்ணத்துப் பெருமையை கல்மிஷற னுக்குக் கெளதம முனிவர் கூறி முடித்தார். £5ाकी இன்று உள்ள ஸ்காந்தம் தொடர்ச்சியாக எழுதப்பட்ட ஒரு நூல் அன்று என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. அதில் சொல்லப்பட்டுள்ள தலங்கள் அவற்றின் பெருமை ஆகிய வற்றைப் பார்க்கும் போது ஒவ்வொரு ஊர்க்காரர்களும் தங்கள் ஊருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கதைகளை எழுதி ஸ்காந்தத்தில் சேர்த்து விட்டனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அப்படிச் சொல்லப்பட்ட பல தலங்களில் காசியின் பெருமைகள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன.