பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 - பதினெண் புராணங்கள் நந்திகேசுவர தீர்த்தம் வெகு காலத்திற்கு முன் கர்ணகி என்ற இடத்தில் ஒரு வேதியன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன. மனைவியுடன் இரண்டு பிள்ளை களையும் கர்ணகியில் விட்டு விட்டு பிராமணன் வாரணாசி சென்றான். அவன் அங்கேயே இறந்து விட்டதாகத் தெரிய வந்ததால் அங்கேயே சடங்குகளைச் செய்தனர். அவனுடைய மனைவி இறப்பதற்குரிய நேரம் வந்ததும் உயிர் பிரியாமல் அவதிப்பட்டாள். அவள் பிள்ளைகள், "தாயே! உன்னுடைய ஏதோ ஒரு விருப்பம் நிறைவேறாததால் உன் உயிர் பிரிய மறுக்கிறது. அது என்னவென்று தெரிவித்தால், நாங்கள் அதனைச் செய்கின்றோம்” என்றனர். கிழவி, 'பிள்ளைகளே! இறப்பதற்குள் உங்கள் தந்தையைப் போல வாரணாசி போய் வர நினைத்தேன். அது இயலாமல் போய்விட்டது. இப்பொழுது என்னுடைய எலும்புகளையாவது வாரணாசியில் கொண்டு சேர்ப்பதானால் நான் அமைதியாகச் சாவேன்” என்றாள். பிள்ளைகள் அவ்வாறு செய்வதாகக் கூறியவுடன் அவள் உயிர் நீத்தாள். அவள் மூத்த பிள்ளையாகிய சுவடி அந்த எலும்புகளை எடுத்துக் கொண்டு வாரணாசிக்குப் புறப்பட்டான். மிக நீண்ட தூரம் ஆகையால் வழியில் தங்கிச் செல்ல நேர்ந்தது. ஒர் இரவு ஒரு பிராமணன் வீட்டில் தங்கினான். வீட்டுக்கார பிராமணன் காலையில் பால் கறக்க முற்படுகையில் கன்றுக்குட்டி அடம் பண்ணி அவனைப் பாலைக் கறக்க விடாமல் செய்தது. கோபம் கொண்ட பிராமணன் கன்றுக்குட்டியை நன்றாக அடித்து விட்டு, பாலைக் கறந்து கொண்டு வீட்டிற்குள் சென்றான். இப்போது அடிபட்ட கன்றுக்குட்டியுடன் பசுமாடு பேச ஆரம்பித்தது. திண்ணையில் படுத்திருந்த சுவடிக்கு இந்த உரையாடல் நன்கு கேட்டது. பசு கன்றுடன் பின்வருமாறு பேசிற்று: "என்