பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 383 இவற்றுள் ஏதாவதொன்றை வைத்துக் கொண்டுதான் சாட்சி சொல்ல வேண்டும். பொய்சாட்சி கூறுபவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு வழி உண்டு. ஏழு ஆல இலைகளை அடுக்கி அதன் மேல் ஒரு நெருப்புத் துண்டை வைத்துக் கொண்டு அக்னியை ஏழு முறை வலம் வரவேண்டும். அவர் கை வேகவில்லையானால் உண்மை கூறுகிறார் என்றும், இவைகளைத் தாண்டி நெருப்பு கையைச் சுட்டால் பொய் சாட்சி கூறுகிறார் என்றும் தெரிந்து கொள்ளலாம். சாட்சி கூறுபவனைத் தண்ணீருக்குள் அமுக்கி வைத்து அவன் சாகவில்லையானால் உண்மை சொல்கிறான் என்றும், செத்துவிட்டால் பொய்சாட்சி கூறினான் என்றும் அறியலாம். இறக்கும் ஒரு தந்தை, உயில் எழுதி வைத்திருந்தால் அதன்படி அவன் சொத்துப் பிரிக்கப்படும். அப்படி இல்லாமல் பிள்ளைகள் அனைவருக்கும் சமமான பங்கு கிடைப்பதானால் அவன் மனைவிக்கும் சமமான பங்கு ஒன்று உண்டு. இவ்வாறில்லாமல் தந்தை தன் சொத்து முழுவதையும் மூத்த மகனிடம் விட்டுச் செல்வதும் உண்டு. பாட்டனின் சொத்து தந்தைக்கும், மூத்த மகனுக்கும் சமமாகக் கிடைக்கும். பாட்டனார் சம்பாதிக்காமல் தந்தையால் மட்டும் சம்பாதிக்கப் பட்ட பொருள் மகனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மகன் பிறப்பதற்கு முன்னேயே பாட்டனுக்கும், தந்தைக்கும் ஏற்கெனவே சொத்து பிரிக்கப்பட்டிருந்தால் மகன் பிறந்த பிறகு தந்தைக்குக் கிடைத்த சொத்தில் சம பங்கு பிள்ளைக்கு வரும். பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. ஆனால் சொத்தைப் பெற்றுக்கொண்ட ஆண் வாரிசுகள், தங்கைமார்களுக்குத் திருமணம் செய்ய, தங்களுக்குக் கிடைத்த சொத்தில் நான்கில் ஒரு பங்கு செலவிட வேண்டும்.