பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 பதினெண் புராணங்கள் ஆச்சரியத்தோடு நின்றார். விஷ்ணு அவரைப் பார்த்து, நீ யார் என்று எனக்கு தெரியவில்லை, தெரிவி என்றார். அப்பொழுது பிரம்மன் நான்தான் சர்வ வல்லமை உள்ள பிரம்மன். இவ்வுலகம் முழுவதையும் படைக்கிறவன் என்று சொல்லிவிட்டு நீங்கள் யார் என்று கேட்டான். உடனே விஷ்ணு என் பெயர் விஷ்ணு. உன்னை உட்பட அனைத்தையும் படைப்பவன் நான்தான். நீ எனக்கு மகன் முறை ஆவாய் என்றார். அதைக் கேட்ட பிரம்மன், கோபம் கொண்டு நானே அனைத்துமாய் இருக்கும் பொழுது நீ எப்படி எனக்குத் தந்தையாக முடியும். வேண்டுமானால் என்னுள் புகுந்து பாருங்கள் என்றார். உடனே விஷ்ணு, பிரம்மன் வாய் வழியாகப் புகுந்து உள்ளே சென்றபொழுது, பல்வேறு உலகங்கள், உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பிரம்மன் வயிற்றுக்குள் இருப்பதைக் கண்டான். அதைச் சுற்றிப் பார்க்க விஷ்ணுவுக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன. ஒருவாறு யாவற்றையும் பார்த்து முடித்து, மறுபடியும் வாய்வழியே விஷ்ணு வெளியே வந்துவிட்டார். பிரம்மனைப் பார்த்து, நீ என் வயிற்றுக்குள் சென்று பார்த்து வா என்றான். அப்படியே பிரம்மன் விஷ்ணுவின் வாய்வழியே புகுந்து உள்ளே சென்றான். அங்கே தான் படைத்ததைப் போன்று பல உலகங்கள் இருந்ததைக் கண்டார். முழுவதும் சுற்றிப் பார்க்க பிரம்மனுக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன. முடிவில் அவர் வெளியே வர நினைத்தபொழுது, வெளியே வரக்கூடிய வாயில்கள் அனைத்தையும் விஷ்ணு மூடி விட்டான். அந்நிலையில் வேறு வழியில்லாமல் விஷ்ணுவின் கொப்பூழ் வழியாக வெளியே வந்த பிரம்மனுக்கும், விஷ்ணு வுக்கும் பெரும் சண்டை மூண்டது. இவர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் இருவரும் அதிர்ச்சியுறும்படியாக