பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 பதினெண் புராணங்கள் படகிலேயே கழிப்பாயாக! அத்துடன் உணவு தானியங்களை எடுத்துக் கொள். பாம்பினைக் கொண்டு அப்படகை என் கொம்பில் கட்டிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு மீன் மறைந்து விட்டது. அந்த மீன் கூறியவாறே அனைத்தும் நடந்தது. படகில் ஏறிக்கொண்டே மனு அந்த மீனை வேண்டிக் கொண்டதற்கு இணங்க, மீன் மச்சபுராணத்தை அவனுக்குக் கூறிற்று. இறுதியில் அந்தப் படகு இமயத்தின் உச்சியை அடைந்தது. உயிர்கள் அனைத்தும் மறுபடியும் பட்ைக்கப் பட்டன. ஹயக்கிரீவன் என்னும் தானவன் வேதங்களையும் பிரம்ம ஞானத்தையும் திருடிச் சென்றான். மீன் அவதாரத்தில் இருந்த விஷ்ணு, ஹயக்கிரீவனைக் கொன்று வேதங்களை மீட்டார். 2. கூர்ம அவதாரம் நீண்ட காலத்திற்கு முன்னர், தேவாசுரப் போர் நடை பெற்றது. போரில் தோற்ற தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு, பிரம்மன், மற்றும் தேவர்களிடம், "நீங்கள் அனைவரும் அசுரர்களுடன் ஒரு தற்காலிக உடன் படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி தேவ, அசுரர்கள் சேர்ந்து பாற்கடலைக் கடைய வேண்டும். தேவர் களுக்கு இதனால் லாபம் ஏற்படும்படி நான் பார்த்துக் கொள்வேன்” என்று கூறினார். இவ்வுடன்படிக்கையை இரு சாராரும் ஏற்றுக் கொண்டு பாற்கடலைக் கடையத் தயாராயினர். மந்தர மலையினை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைய ஆரம்பித்தனர். சில மணி நேரத்தில் மந்தர மலை மிகுந்த கனத்தின் காரணமாகக் கடலில் மூழ்க ஆரம்பித்தது. உடனே விஷ்ணு ஆமையாக உருவெடுத்து, அம்மலையினைத்