பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 . பதினெண் புராணங்கள் சதி சென்ற பொழுது யாகம் தொடங்கிவிட்டது. அவருடைய தாயும், சகோதரிகளும் அவளிடம் பேசிக் கொண்டிருந்தனரே தவிர தட்சன் அவளை மதிக்கவில்லை; பேசவுமில்லை! சினம் கொண்ட சதி, தட்சனின் எதிரே வந்து நின்று, என்னுடைய கணவனை அவமானப்படுத்தினாய். ஒரு கற்புடைய பெண் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது. உன்னுடைய மகள் என்ற காரணத்தால், இந்த உடம்பு நீ கொடுத்ததாகும். இவ்வுடம்போடு நான் இருக்க விரும்ப வில்லை என்று கூறிவிட்டு அக்னி குண்டத்தின் எதிரே உட்கார்ந்தாள். மூச்சை அடக்கிப் பிரமரந்தரம் என்று சொல்லப் படும் கபாலத்தின் வழியே தன் உயிர் போகுமாறு செய்தாள். உடனே அவள் உடல் தீப்பற்றி எரிந்து சாம்பலாயிற்று. வியப்பும் அதிசயமும் கொண்டு அனைவரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சதியுடன் வந்த சிவ கணங்கள் அங்குள்ள முனிவர்களை யும், பிருகு முனிவனையும் வதைத்தனர். ஆனால் மாபெரும் சக்தி படைத்த பிருகு முனிவர் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான தேவ கணங்களை உருவாக்கி சிவ கணங்களோடு போராடச் செய்தார். சிவ கணங்கள் தோற்று ஒடிச் சிவனிடம் நடந்ததைக் கூறினர். பெருங் கோபம் கொண்ட சிவன், தலையில் இருந்து ஒரு முடியைப் பறித்து மிகுந்த உக்கிரத்துடன் அதைக் கீழே எறிந்தார். அதிலிருந்து வீரபத்திரர் என்று ஒருவர் தோன்றினார். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக இருந்த அவர் எலும்பு மாலைகளை அணிந்து கொண்டிருந்தார். ஈடு இணையற்ற திரிசூலம்’ என்ற படையைக் கையில் ஏந்தி இருந்தார். மிக்க பணிவுடன் சிவனைப் பணிந்து, எனக்கு இடும் கட்டளை என்ன? என்று கேட்டார். சிவன், நடந்ததை நீ அறிவாய் அல்லவா? தட்சனுடைய யாகத்திற்குச் சென்று, அவனைக் கொன்று