பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிடும் கலைக்களஞ்சியம் இவற்றுள் ஒன்று. * கலைக் கதிர் போன்ற மாத வெளியீடுகளும் பிற பத்திரிகைகளும் அறிவுத் துறையில் கட்டுரைகள், விளக்கங்கள் முதலியவற்றை வெளியிடுவது மற்றொன்று. இவை தவிர, பல தமிழ் அறிஞர்கள் தாங்கள் பெற்ற ஞானத்தை எளிய தமிழில், அனைவரும் உணரத்தக்க முறையில், எழுதி வருவதும் மிகவும் நம்பிக்கை தரக்கூடிய நிலைமையாகும்.

கல்வித் துறையில் பாட போதனையின் தரம் உயர வேண்டுமென்பது அனைவருடைய விருப்பம். நமது உயர்நிலைப் பள்ளிகளில் பாடபோதனை தமிழில் அமைந்திருக்கின்றது. ஆனால், இந்தப் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் பாடமும் ஆங்கிலத்தில் அளிக்கப்பெறுகின்றன. பின்னர் அவர்கள் பள்ளிகளில் மேற்கொள்ள விருக்கும் பணிகளில் அவர்கள் பெற்ற அறிவும் பயிற்சியும் முற்றிலும் பயன்படாமல் போகின்றன. எனவே, முதலில் ஆசிரியர்க் கல்லூரிகளில் பாடங்கள் தமிழில் சொல்லித் தரப்பட வேண்டியது மிகவும் அவசியம். இதற்குத் தேவையான புத்தகங்கள் தமிழில் இல்லையே என்று சிலர் கூறுகின்றார்கள். இந்தக் குறையை நீக்க திரு. சுப்பு ரெட்டியார் முன்வந்திருப்பது பாராட்டத் தக்கது.

அவர் எழுதியிருக்கும் தமிழ் பயிற்றும் முறை பெரிய அளவு நூலாக அமைந்திருக்கின்றது. அதை முற்றிலும் பார்க்க எனக்கு நேரமும் ஓய்வும் கிட்டவில்லை. என்றாலும், பார்த்த அளவில் தாய் மொழிப் பயிற்சியைத் தவிர அத்துடன் தொடர்பாக இருக்கவேண்டிய நவீன முறைகள் பற்றிய பிற செய்திகளும் சேர்க்கப் பெற்றிருப்பதாக அறிகின்றேன். அவருடைய புத்தகம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலும் பயிற்சி பெறும் மாணுக்கர்களுக்குப் பெரிதும் பயன்படும் என்று நம்புகின்றேன்.

இன்று நமது உயர்நிலைப் பள்ளிகளில் பாடபோதனை தமிழில் அமைந்திருக்கின்றது. இதன் காரணமாக அவர்