பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(38) பெரிய னிதன் யார்?



ஆங்கில எழுத்தாளர் ஜி. கே. செஸ்டர்டன் ஆறடி உயரமும் முந்நூறு பவுண்டு கனமும் உள்ள பெரிய மனிதர்!

“எல்லோரும் அறிந்திருக்கும்படி பிரமுகராகப் பெயர் பெற்றிருப்பது மிகவும் சிறப்பு அல்லவா?”என்று கேட்டாள் ஒரு இளம் பெண்.

"ஆமாம், என்னை எல்லோருக்கும் தெரியும். தெரியாதவர்கள் இந்தப் பெரிய மனிதர் யார் என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்” என்று பெருமையாகச் சொன்னாராம் செஸ்டர்டன்.



(39) றுபடியும் தொடங்கலாமா?



ஐரோப்பாவில், பதினெட்டாம் நூற்றாண்டில் ராஸினி என்ற நாடக நடிகர் ஒருவர் இருந்தார்.

அவருடைய நண்பர் ஒருவர் தன் விட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார்.

விருந்திலே பரிமாறப் பட்டிருந்த பண்டங்கள் கால் வயிற்றுக்குக் கூடப் போதாமல் வைக்கப்பட்டிருந்தன.