பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi எல்லாப் புராணங்களும் அதிக வேறுபாடின்றி இக் கருத்தைப் பேசுகின்றன. இந்தப் பொதுத்தன்மை போக, ஒவ்வொரு புராணத்திலும் தனித்தனியாக நூற்றுக் கணக்கான கதைகள் பேசப்படுகின்றன. பெரும்பாலான கதைகள் ஏறத்தாழ எல்லாப் புராணங்களிலும் பயின்று வருகின்றன. என்றாலும் ஒரே கதையாக இருப்பினும் பற்பல சிறிய மாற்றங்களும், சில மிகப் பெரிய மாற்றங்களும் கூட ஒவ்வொரு புராணத்திலும் காணப்படுகின்றன. இதைவிட வியப்பான ஒன்றையும் காணலாம். உதாரணமாக விஷ்ணு புராணத்தின் முற்பகுதியில் சாமந்தக மணி கதையில் கிருஷ்ணன், பலராமன் ஆகிய இருவருடைய வாழ்க்கை முறை மிக மட்டமாகப் பேசப்படுகிறது. கிருஷ்ண னுடைய கூற்றாகவே இவை அமைந்துள்ளது. அதற்கு அடுத்த சில அத்தியாயங்கள் கடந்து, கிருஷ்ணன் வரலாறு மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. இத்தகைய குழப்பங்கள் பெரும்பாலான புராணங்களில் இடம் பெற்றுள்ளன. பிரம வைவர்த்த புராணம், குழப்பங்களுக்குச் சிகரம் வைத்தது போல் அமைந்துள்ளது. இதன் அடிப்படையை ஆராய்ந்தால் ஒர் உண்மையை விளங்கிக்கொள்ள முடியும். ஒரே புராணம் பல பிராந்தியங்களில் பயிலப்படும் பொழுது அந்தப் புராணத்தைச் சொல்பவர்கள் தங்கள் கற்பனைகளையும் கைவரிசைகளையும் உடன் சேர்த்து விடுகின்றனர். இதனாலேயே ஒரே கதையில் பல மாற்றங்கள் ஏற்பட இடமுண்டாயிற்று. நாட்டின் ஒரு பகுதியிலிருந்து, மற்றொரு பகுதிக்குச் செல்லும் இலக்கியங்கள் இத்தகைய மாறுதல் களுக்கு இடமளிப்பது இயற்கையேயாகும். யஜுர் வேதத்தைப் பொருத்தமட்டிலும்கூட கிருஷ்ண யஜுர் என்றும், சுக்கில யஜுர் என்றும் பிரிந்து நிற்பதைக் காண முடியும். இந்தியாவின் தென்பகுதியில் வழங்கும் கிருஷ்ண யஜுர், வட பகுதியில் வழங்கும் சுக்கில யஜூரிலிருந்து