பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 13 பூமியை சமன்செய். மலைகளை எல்லாம் ஒருபுறமாக ஒதுங்கி இருக்குமாறு செய்வாயாக சமதரையில் வேளாண்மை செய்தால் தேவையான வளங்கள் உனக்குக் கிட்டும்” என்று கூறிற்று. இதைச் செவியுற்ற பிருத்து அவ்வாறே செய்தான். மலைகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு சமதரை பெரிய அளவில் கிடைத்தமையின் வேளாண்மை வளம் பெறலாயிற்று. பூமியின் வளம் கொழிக்கலாயிற்று. உயிர்கள் வாழ்வுக்கு ஏற்றதாக இப்பூமியைச் சரிசெய்த மன்னவன் பெயராகிய பிருத்து என்பதே பூமிக்குப் பெயராக பிருத்வி என்று வழங்கலாயிற்று. மன்வந்திரங்கள் பருப் பொருளாகவும், முன் பொருளாகவும் இந்தப் பேரண்டத்தின் தோற்றம், நிலைபேறு, அழிவு என்பதைப் பற்றி பிரம்ம புராணம் தரும் கணக்கைச் சுருக்கமாகக் காணலாம். நான்கு யுகங்களை அடக்கிய கால எல்லைக்கு 'மன்வந்திரம்' என்ற பெயருண்டு. ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் அதிபதியாக இருப்பவர் மனு. இந்தப் பிரபஞ்சம் தோன்றிய நாள்முதல் இதுவரை சுவயம்புமனு முதல் ஆறு மனுக்கள் தோன்றி மறைந்துள்ளனர். இப்பொழுது நடைபெறும் ஏழாவது மன்வந்திரத்திற்குத் தலைவன் 'வைவஸ்வத மனு என்பதாகும். இந்த மன்வந்திரத்தில் முறையே கிருத, திரேத, துவாபர யுகங்கள் முடிந்து இப்பொழுது கலியுகம் நடைபெறுகிறது. இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு மகாயுகம் என்று அழைக்கப்படும். இந்த மகாயுகத்தின் கால எல்லை 12,000 தேவ வருஷங்கள் ஆகும். இதை மனிதக் கணக்கில் கொள்வதானால் 43:20,000 வருடங்கள் ஆகும். இதுபோன்றே சுழற்சி முறையில் எழுபத்தோரு மகாயுகங்கள் முடிவுற்றால் வைவஸ்வத மனுவின் ஆட்சி முடிந்து அந்த மன்வந்திரமும்