பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பதினெண் புராணங்கள் சுகர்மாவைக் கேட்டுத் தெரிந்து கொள் என்று கொக்கு கூறியது. சுகர்மா இருக்குமிடத்தை கொக்கு கூறவே பிப்பலா, சுகர்மா இருக்குமிடம் வந்து சேர்ந்தான். சுகர்மா தன் பெற்றோர்களை உபசரித்துக் கொண்டிருந்தான். உபசரணை முடித்த சுகர்மா வெளியே வந்தவுடன் "ஒ பிப்பலா இந்த உடம்பை வருத்தி 3,000 ஆண்டுகள் செலவு செய்து என்ன பயனைப் பெற்றாய்? நான் உன்னைப் போல் தவம் செய்ய வில்லை. வேதங்களைக் கரைத்துக் குடிக்கவில்லை. ஆனாலும் இந்திராதி தேவர்கள் நான் அழைத்தால் இங்கு வந்து நிற்பார்கள். அதுமட்டுமல்ல, உன்னிடம் பேசிய கொக்கு பிரம்மனே ஆவார். இன்னும் ஏதாவது தெரிந்து கொள்ள விரும்புகிறாயா?” என்று கேட்டான் சுகர்மா. இந்திரன் முதலானவர்களை அங்கு வருமாறு செய்த சுகர்மா 'என்னுடைய சக்தியைக் காட்டவே இவர்களை இங்கு வரவழைத்தேன்’ என்று கூறினான். இதற்கு மேலும் உனக்கு ஒரு விளக்கம் தருவதற்கு யயாதியின் கதையைச் சொல்கிறேன், கேள்’ என்றான். யயாதியின் கதை இக்கதை முன்னரே பிரம்ம புராணத்தில் சொல்லப் பட்டது. அங்குச் சொல்லப்பட்டதற்கும், இங்குச் சொல்லப் பட்டதற்கும் உள்ள ஒரே ஒரு வேறுபாட்டை மட்டும் இங்குக் குறிக்கலாம். பிரம்ம புராணத்தில் புரு என்ற தன் மகனிடம் தன் முதுமையைக் கொடுத்து அவன் இளமையை யயாதி வாங்கியதற்குக் காரணம், உலகைச் சுற்றிப் பார்க்க என்று கூறப்பட்டுள்ளது. இங்குள்ள கதைப்படி யயாதி தன் முதுமையை மகன் புருவிடம் கொடுத்துவிட்டு அவன், இளமை யைப் பெற்றுக் கொண்டதற்குக் காரணம் ரதியின் மகளான அஷ்ருவிந்துமதியை மணந்து கொள்வதற்காக என்பதாகும்.