பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 667 பகுதியை வெட்டிவிட்டான். வெட்டப்பட்ட இப்பகுதியிலிருந்த தேஜஸை மூலப்பொருளாக வைத்து சுதர்சன சக்கரம், சிவனுக்குரிய திரிசூலம், இந்திரனின் வஜ்ராயுதம் என்பவற்றை விஸ்வகர்மா உண்டாக்கினார். தன் தேஜஸைக் குறைத்துக் கொண்ட சூரியன் சம்ஜனாவைத் தேடிச் சென்றான். அவள் பெண் குதிரை வடிவுடன் இருந்ததால், தான் ஒரு ஆண்குதிரை வடிவெடுத்து அவளுடன் வாழ்ந்தான். இவர்களுக்கு அஸ்வினிகள் என்ற பெயரில் இருவர் தோன்றினர். இதன் பிறகு சம்ஜனாவும், சூரியனும் தம் பழைய வடிவை ஏற்றுக் கொண்டனர். சனியின் உடன் பிறந்த சாவர்ணி மனு சுமேரு மலைக்குச் சென்று தவம் செய்தான். பின் ஒரு மனுவாகப் பிறக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றான். சனி நவகோள்களில் ஒருவனாகிறான். யமுனா, தப்தி இருவரும் இரண்டு ஆறுகளாக ஆயினர். யமன் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து, மரண தேவனாக ஆகும் வரம் பெற்றான். தட்சனும், சதியும் - இக்கதை ஏற்கெனவே மற்ற புராணங்களில் கொடுக்கப் பட்டிருந்தாலும், அங்கு காணப்படாத பகுதி இங்கு தரப் பட்டுள்ளது. யாக சாலைக்குள் நுழைந்து தட்சனைப் பார்த்து, என் கணவர் சிவனை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டாள். அது கேட்ட தட்சன், “உன் கணவன் எவ்விதத் தகுதியும் இல்லாதவன். ரிஷிகளும், முனிவர்களும் இங்கே வந்திருக் கிறார்கள். அவர்களுக்குச் சமமாக எவ்விதத் தகுதியும் இல்லாத உன் கணவனை அழைப்பது பொருந்தாத செயலாகும்.” இதைக் கேட்ட சதி, “சிவனுடைய பெருமை அறியாத உனக்கு மகளாகப் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன். இந்த உடம்பு நீ கொடுத்தது. ஆதலால் இந்த உடம்புடன் உயிர்வாழ விரும்ப