பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 111 நல்லவனாக இருந்ததால் அந்த மணி அவனுக்கும், நாட்டுக்கும் நல்லது செய்தது. மணியை வைத்திருந்த பிரசேனன் அதை அணிந்து கொண்டு வேட்டையாடச் சென்றிருந்தான். அவன் நல்லவனல்ல. ஆதலால் காட்டில் ஒரு சிங்கம் அவனைக் கொன்று விட்டது. சிங்கம் மணியை எடுத்துச் செல்ல வேண்டும் என்று முயன்றபோது, கரடிகளில் உயர்ந்தவனாகிய ஜாம்பவான் காட்டிற்கு வந்து சிங்கத்தைக் கொன்று மணியை எடுத்துச் சென்று தன் குழந்தையிடம் விளையாடக் கொடுத்தது. காடு சென்ற பிரசேனன் நீண்ட நேரம் வராமையால் அவன் இறந்துவிட்டான் என்று முடிவு செய்து விட்டனர். கிருஷ்ணனுடைய எண்ணம் பலருக்கும் தெரியுமாதலால் அவன்தான் பிரசேனனைக் கொன்று மணியை எடுத்துக் கொண்டான் என்று பலரும் நினைத்தனர். இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட கிருஷ்ணன் தானே பிரசேனனைத் தேடிக் காட்டிற்குச் சென்றான். இறந்து கிடந்த பிரசேனன், சிங்கம் ஆகிய இரு உடல்களையும் பார்த்தான். நடந்ததை ஒருவாறு ஊகித்துக் கொண்ட கிருஷ்ணன் கால் தடங்கள் பற்றிச் சென்று ஜாம்பவான் இருப்பிடத்தை அடைந்தான். ஜாம்பவானின் குழந்தை மணியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. கிருஷ்ணனைக் கண்டு குழந்தை அலறவே, ஜாம்பவான் வந்தது. இருவருக்கும் பெரும் போர் நடந்தது. அப்போர் இருபத்தியோரு நாட்கள் நீடித்தது. கிருஷ்ணன் வராமையால் அவனைத் தேடி வந்த யாதவர்கள் ஜாம்பவான் வீடுவரை கிருஷ்ணன் சுவடு இருப்பதையும் அதன்பிறகு அது காணாமல் போனதையும் பார்த்தார்கள். இதற்குள் கிருஷ்ணன் சென்று ஒருவாரம் ஆகிவிட்டபடியால் அவன் இறந்துவிட்டான் என்று நினைத்து யாதவர்கள் பலரும் கூடி கிருஷ்ணனுக்கு சிரத்தி சடங்கு செய்தார்கள். சிரத்தையில் ஏற்படுகின்ற புண்ணியம் கிருஷ்ணனைச் சென்று