பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 585 வாக்களித்தார். இந்த அரசன் கிருஷ்ணனைப் போருக்கு அழைத்தான். போரில் கிருஷ்ணனின் சக்கரம், அந்த முட்டாள் அரசனைக் கொன்று, அவனுடைய படைகளை எல்லாம் கொன்று குவித்தது. மேலும் காசி நகரம் முழுவதையும் தீக்கிரையாக்கி சக்கரம் சிவனிடத்தில் வந்தது. பின் தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரபச தீர்த்தம் ஸ்கந்த புராணத்தின் கடைசி காண்டம் பிரபச காண்டம். பிரபச என்ற சொல்லுக்கு ஒளி பொருந்தியது என்று பொருள். இத்தீர்த்தம் சமுத்திரக் கரையில் உள்ளது. இத்தீர்த்தத்தில் குளித்தாலும் முழுப்பயனை அடைய முடியாது. இத்தீர்த்தம் மிகவும் பெருமை வாய்ந்தது. மழைத்துளிகளை எண்ணினாலும் ஸ்கந்த புராணத்தில் உள்ள பாடல்களை எண்ண முடியாது. எவ்வளவு பாடல் களைக் கேட்டாலும், அவ்வளவுக்குரிய புண்ணியம் கிடைக்கும் என்று சூத முனிவரே சொன்னார் என்று புராணம் முடிவடைகிறது.