பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 167 விட்டாள் குஷ்ணா. இதனிடையில் குழந்தை இல்லை என்று கண்டவுடன் அனைவரும் பெருங் கூச்சலிட்டுத் தேடுவா ராயினர். இத்தனைக் கூச்சலிலும், குழப்பத்திலும் ஒரு சிறிதும் ஈடுபடாமல் குஷ்ணா சிவ பூஜையில் ஈடுபட்டிருந்தாள். அவள் பூசையை ஏற்றுக் கொண்ட சிவன் அவள் பிள்ளையைப் பிழைக்கச் செய்து அவளிடம் சேர்ப்பித்தார். மூத்தவளை தண்டிக்கத் துவங்கியபோது, அவளை மன்னித்து விடும்படி குஷ்ணா வேண்டிக் கொண்டாள். இந்தப் பெருந்தன்மையில் மகிழ்ச்சி அடைந்த சிவன், மற்றொரு வரம் கொடுக்கத் தயாரானார். குஷ்ணா சிவன் கொடுப்பதாகக் கூறிய வரத்தைப் பயன்படுத்தி அந்தக் குளத்தங்கரையிலேயே லிங்க ரூபமாகச் சிவன் இருக்கவேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். பன்னிரெண்டாவது ஜோதிர் லிங்கமாகக் குஷ்மேஸா என்ற பெயருடன் சிவன் அங்கே இருக்கிறார். சுதர்சன சக்கரக் கதை முன்னொரு காலத்தில் நடைபெற்ற தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் மிகவும் நலிந்து போனார்கள். அவர்கள் அனைவரும் ஒடிச்சென்று விஷ்ணுவிடம் முறையிட்டனர். பலம் பொருந்திய அசுரர்களுடன் போர் புரிய வேண்டுமானால், அதற்குரிய ஆயுதம் எனக்கு வேண்டும். அதைக் கொடுக்கக் கூடியவர் சிவபிரானே என்று விஷ்ணு கைலை சென்று சிவனுடைய ஆயிரம் நாமங்களை தினமும் சொல்லி நீண்ட காலம் வழிபட்டார். ஆயிரம் நாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லும் பொழுது ஒவ்வொரு தாமரைப் பூவை சிவனுக்கு அர்ச்சனை யாகச் செய்தார். ஒரு நாள் ஆயிரம் பூக்களில் ஒன்று குறைந்து விடவே தாமரைக் கண் என்று சொல்லப்படும் தன் ஒரு கண்ணைப் பறித்து அர்ச்சனை செய்து விட்டார். மகிழ்ந்த