பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 579 மேற்கொண்டார். தர்மாரண்யத்தில் வந்துவிட்டபடியால் விஷ்ணுவுக்குக் குதிரைத் தலைபோய், சொந்தத் தலையே வந்துவிட்டது. பிரம்மன் முகத்தில் இருந்த குரூரம் நீங்கி, அவரும் பழைய வடிவம் பெற்றுவிட்டார். கோகர்ணத்தின் சிறப்பு மித்ரசகா என்ற மன்னனுக்குக் கெளதம முனிவர் கோகர்ணத்தின் பெருமையைச் சொல்லத் தொடங்கினார். இந்த மன்னன் கால் கருப்பாகி கல்மிஷபாதர் என்ற பெயரைப் பெற்ற கதை முன்னரே விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. நான் ஒருமுறை மிதிலைக்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது, வழியில் நிழல் அடர்ந்த இடத்தில் ஒரு குளம் இருப்பதைக் கண்டு அங்குத் தங்கி ஒய்வெடுத்துக் கொண்டு போகலாம் என்று அமர்ந்தேன். பக்கத்தில் ஒரு வயது முதிர்ந்த கிழவி படுத்திருந்தாள். அவள் உடல் முழுவதும் நோயினால் வாடி, புண்கள் அடர்ந்து, அதில் புழுக்கள் நெளிந்து கொண்டு இருந்தன. அவள் உயிர் போகும் நிலையில் இருந்ததால் இறக்கின்ற வரையில் உதவியாக இருக்கலாம் என்று அவள் பக்கத்தில் தங்கி இருந்தேன். என் கண் எதிரில் அவள் உயிர் பிரிந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். சிவலோகத்தில் இருந்து சிவகணங்கள் அவளை அழைத்துப்போக வந்தனர். இவள் என்ன புண்ணியம் செய்து சிவலோகம் போகிறாள் என்று கேட்டபொழுது அவர்கள் சொன்ன கதை இதுதான்: இக்கிழவி முன்பிறப்பில் ஒரு பிராமணப் பெண்ணாக இருந்தாள். இளமையில் விதவையாகிவிட்ட அவள் வாழ்வு முறைமாறி தீயவருடன் சேர்ந்து வாழ்ந்தாள். மது, மாமிசம் இரண்டையும் நன்றாகப் பழகி விட்டாள். ஓர் இரவு மாமிசம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்ததால், பின்புறம்