பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 பதினெண் புராணங்கள் லட்சுமி கிருஷ்ணனின் இடப்பாகத்தில் இருந்து ஒரு தேவதை தோன்றினாள். அவள் தானே இரண்டாகப் பிளந்து, லட்சுமி யாகவும், ராதிகா ஆகவும் ஆனாள். ஆடனன் இடப்புறத்தில் இருந்து நான்கு கைகளுடன் நாராயணனும், வலப்புறத்தில் இருந்து கிருஷ்ணனும் தோன்றினர். ராதிகாவை மணந்து கிருஷ்ணன் கோலோகமும், லட்சுமியை மணந்து விஷ்ணு வைகுந்த லோகமும் சென்றனர். லட்சுமியை வைகுந்தத்தில் சொர்க்கலட்சுமி என்றும், இல்லங்களில் கிருகலட்சுமி என்றும், அரசிகளில் ராஜலட்சுமி என்றும் அழைக்கிறார்கள். பிரம்மா, சிவன், விஷ்ணு இவர்களால் வணங்கப்பட்டவள் லட்சுமி. - ஒருநாள் இந்திரன் ஐராவதத்தில் வரும்பொழுது துர்வாச முனிவர் விஷ்ணுவிடம் நேரடியாகப் பெற்ற தெய்வீக சக்தி வாய்ந்த பாரிஜாத மலரை இந்திரனுக்குக் கொடுத்தார். எல்லை மீறிக் குடித்திருந்த இந்திரன் அம்மலரை வாங்கி தான் ஏறி இருந்த ஐராவதம் யானைமேல் வைத்தான். மலரின் அருமை அறியாமல் அதனை அலட்சியப்படுத்திய இந்திரனைப் பார்த்து, லட்சுமி உன்னை விட்டு நீங்கி விடுவாள். நீ ஏறியுள்ள ஐராவதத்தின் தலை வெட்டப்பட்டு, சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த கணேசருக்குப் பொருத்தப்படும் என்று சாபம் கொடுத்தார். மிக்க துயரம் அடைந்த இந்திரன் எல்லா வற்றையும் இழந்த நிலையில் பிரம்மாவிடம் சென்று முறையிட, அவர் நானொன்றும் செய்ய முடியாது. விஷ்ணுவிடம் போகலாம் என்று இந்திரனை அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் போனார். விஷ்ணு இந்திரனைப் பார்த்து, நீ இழந்த அத்தனையும் லட்சுமி உள்பட உன்னிடம் வருமாறு செய்கிறேன் என்று கூறிச் சென்றார்.