பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பதினெண் புராணங்கள் முதுகில் தாங்கிக் கொண்டு ஒடப் புறப்பட்டான். திடீரென்று அசுர வடிவத்தைப் பெற்று மலைபோன்று ஒரு மேனியைப் பெற்றுக் கொண்டான். என்ன செய்வதென்று அறியாத பலராமனைப் பார்த்துக் கிருஷ்ணன், 'உன் சக்தியை உபயோகித்து அவனைக் கொன்று விடு' என்றான். கிருஷ்ணனின் அறிவுரைப்படி உள்ளங்கையை மடக்கி அவன் தலையில் குத்தி அவனைச் சாகடித்தான் பலராமன். இதற்கு அடுத்தபடியாக கோவர்த்தன கிரியைக் குடை யாகப் பிடித்த கதையை விஷ்ணு புராணம் பேசுகிறது. இப் பகுதியில் சில புதுமைகள் காணப்படுகின்றன. அவை வருமாறு: மழை ஒய்ந்த பிறகு கிருஷ்ணன் கோவர்த்தன கிரியை அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டான். கிருஷ்ணனை வந்து வணங்கிய இந்திரன், 'ஐயனே! கோக்களாகிய பசுக்களை ஏழு நாட்கள் நீ காத்தமையால் இன்றிலிருந்து கோவிந்தன்' என்ற பெயரும் உனக்கு ஏற்படுவதாகும். கிருஷ்ணா! என்னுடைய மகன் அர்ஜுனன் என்ற பெயரில் பூவுலகில் பிறந்துள்ளான். அவனைக் காக்க வேண்டியது உன் பொறுப்பாகும்” என்று கூற, கிருஷ்ணனும் அதை ஏற்றுக்கொண்டான். கிருஷ்ண லீலைகள் மேலும் பலவற்றைப் பற்றி விஷ்ணு புராணம் விரிவாகப் பேசுகிறது. அவற்றுள் சில வருமாறு: அரிஷ்டா என்ற அசுரன் மிகப் பெரிய பாய்ச்சலுடன் காளை வடிவு கொண்டு, கோகுலத்துள் புகுந்து பல அட்டுழியங்களை மிகச் செய்தான். மிக உயரமான அந்த எருதை அடக்க யாரும் முன்வரவில்லை. கிருஷ்ணன் கைகளைத் தட்டி அந்த எருதைத் தன்புறமாக வரவழைத்து அதன் கொம்பை உடைத்து, அதன் உடலையும் பிளந்தான். கேசி என்ற அசுரன் மிகப் பெரிய குதிரை வடிவம் கொண்டு விண்ணையும், மண்ணையும் சாடுகின்ற அளவில் கோகுலத்தில் புகுந்தான். கிருஷ்ணன் அவன் வாய்க்குள் கையைவிட்டு ஒவ்வொரு பல்லாக