பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 பதினெண் புராணங்கள் ஒத்துக்கொள்ளவே பார்வதியின் தந்தையாகிய இமவான் மிக்க ஆடம்பரத்துடன் பார்வதியைச் சிவனுக்கு மண முடித்தான். ஸ்கந்தனின் தோற்றமும், லீலைகளும் பார்வதியை மணந்து கொண்ட சிவன் கந்தமாதன மலைக்குச் சென்று அங்குள்ள கோயிலில் தங்கிவிட்டார். கோயில் கதவு சாத்தப்பட்டு இருந்தது. ஒராயிரம் ஆண்டுகள் உருண்டுவிட்டன. கதவு திறக்கவும் இல்லை. சிவன் வெளியில் வரவும் இல்லை. சிவன் கந்தமாதனக் கோயிலுக்குள் தங்கி விட்டார். நீண்ட நாட்களாக வெளிவரவில்லை என்ற செய்தி பரவியவுடன் தைத்தியர்களின் அட்டகாசம் அதிகமாயிற்று. பெருங்கலக்கமுற்ற தேவர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். பிரம்மனும், விஷ்ணுவும் அக்கூட்டத்தில் இருந்தனர். எப்படியாவது சிவனுடைய தனிமையைக் கலைத்து வெளியே வரச்செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தனர். இறுதியாக அக்னிதேவனை அழைத்து, நீ எப்படியாவது கோயிலுக்குள் சென்று சிவனுடைய தனிமையைக் கலைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ஆனால் சிவனுடைய கோயில் நந்தி தேவரால் வலுவாகக் காவல் செய்யப்பட்டது. அவரைத் தாண்டிச் செல்ல முடியாது என்று அறிந்த அக்னி, அணு உரு எடுத்துக் கொண்டு மெள்ள மெள்ள நகர்ந்து கோயிலுக்குள் சென்று விட்டார். அங்கு பார்வதியைச் சந்தித்த அவர் தனக்குப் பிச்சையிடுமாறு வேண்டினார். தங்கள் தனிமை கலைக்கப்பட்டதால் பார்வதியும் கோபம் அடைந்தார். ஆனால் பிச்சை என்று கேட்பவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று சிவனுடைய சக்தியில் ஒரு சிறு பாகத்தை அவனுக்குப் பிச்சையாக அளித்துவிட்டு, இந்தப் பிச்சையை அக்னி மூலம் ஏற்கின்ற உண்மை பேசுகின்ற தேவர்கள்