பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பதினெண் புராணங்கள் என்றாள். அதுபோலவே உஷா கனவு கண்டாள். ஆனால் அவன் யாரென்று அறிந்து கொள்ள முடியவில்லை. அவளுடைய தோழி சித்ரலேகா தேவர்கள், அசுரர்கள் ஆகிய பலருடைய படங்களையும் அவரிடம் காட்டியபொழுது அவர்கள் யாரும் இல்லை. இப்படங்கள் அவள் கனவில் கண்டவன் இல்லை என்று அறிந்தவுடன், பூலோக வாசிகளில் மனிதர்களுள் அரசகுமாரர் படங்களைக் காட்டினாள். அநிருத்தன் படத்தைப் பார்த்து இவன் தான் என்று கூறி விட்டாள். அநிருத்தன் யாரென்று அறிந்த தோழி, துவாரகை சென்று இரகசியமாக அநிருத்தனை அழைத்து வந்து உஷாவிடம் சேர்த்து விட்டாள். அநிருத்தன் வாணாசுர கோட்டைக்குள் நுழைந்தவுடன் கொடி இரண்டாக உடைந்து விட்ட்து. ஆயிரம் கைகளை உடைய வாணாகரன் யாரிடமாவது போர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பொழுது, மகாதேவன், ‘என்று உன்னுடைய கொடி இரண்டாக ஒடிகிறதோ அன்று உன் விருப்பப்படி சண்டை செய்யலாம்' என்று கூறியிருந்தார். இன்று அதிருத்தனுடன் வாணாசுரன் போர் தொடுத்தான். அநிருத்தன் துணையாக யாதவர்கள், பலராமன், கிருஷ்ணன் ஆகியோர் போர் செய்தனர். மகாதேவனும் கார்த்திகேயனும், வாணாசுரன் பக்கம் நின்று போர் செய்தனர். கிருஷ்ணன் சக்கரம் ஏவி வாணாசுரனின் ஆயிரம் கைகளை வெட்டி விட்டான். அவனைக் கொல்ல எத்தனிக்கையில், மகாதேவன் குறுக்கிட்டு அவனுக்கு உயிர்ப் பிச்சை தருமாறு கேட்டார். கிருஷ்ணனும் அதை ஒப்புக் கொண்டான். இறுதியாக உஷா, அநிருத்தன் இருவரும் துவாரகை சென்றனர். சம்பாவின் திருமணம் - கிருஷ்ணனின் மகன்களுள் ஒருவனாகிய சம்பா, துரியோதனன் மகளைக் களவாடி மணம் புரியச் சென்று