பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பதினெண் புராணங்கள் வேதவியாசர், பரத்வாஜ வேதவியாசர், கிருஷ்ண துவை பாயன வேதவியாசர் முதலானோர். விஷ்ணு புராணத்தின் படி வரப்போகும் வேதவியாசர் துரோணரின் மகனாகிய அசுவத்தாமன் ஆவார். அவர் சிரஞ்சீவி ஆவார். 'ஓம்' என்ற பிரணவம் நான்கு வேதங்களின் சாரம் எனப்படும். பரப் பிரம்மம் எங்கும், எப்பொழுதும் எப் பொருளிலும் நிறைந்திருந்தாலும் காண்பவர்க்குரிய மன வளர்ச்சி, அறிவு முதிர்ச்சி ஆகியவற்றிற்கேற்ப பல வடிவ மாகத் தெரிபவர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களிலும் 1 இலட்சம் பாடல்கள் உள்ளன. கிருஷ்ண துவைபாயன வேதவியாசர் இந்த வேதங்களைப் பிரிக்க வேண்டுமென்று முடிவு செய்தவுடன் அவரைச் சுற்றி நான்கு முக்கியமான சீடர்கள் அமர்ந்திருந்தனர். பைலா என்பவருக்கு ரிக் வேதமும், வைசம்பாயனருக்கு யஜுர் வேதமும், ஜைமினிக்குச் சாமமும், சுமந்துவிற்கு அதர்வணமும் கற்பிக்கப்பட்டன. கிருஷ்ண துவைபாயன வியாசர் உரோமஹர்ஷனருக்குப் புராணங்களைக் கற்பித்தார். யாக்ஞவல்கியர் கதை முன்னொரு காலத்தில் அனைத்து ரிஷிகளும் ஓரிடத்தில் கூடினர். பெரிய ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டியிருப்பதால் யாரும் இக்கூட்டத்திற்கு வராமல் இருந்துவிடக் கூடாது. அப்படி வராமல் இருந்துவிட்டால், எட்டாவது நாள் ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் அவர்களைச் சேரும் என்று ரிஷிகள் அறிவித்தனர். என்ன காரணத்தாலோ வைசம்பாயன மகரிஷி இக்கூட்டத்திற்கு வர முடியவில்லை. யாக்ஞவல்கியர் உள்ளிட்ட இருபத்தேழு சீடர்களுக்கு யஜுர் வேதத்தை இருபத்தி ஏழு பங்காகப் பிரித்து அவர் கற்றுத் தந்திருந்தார். கூட்டத்திற்கு வராத காரணத்தால் எட்டாம் நாள் வைசம்பா