பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 91 தரிசிக்கச் சென்றான். பல்லக்குத் தூக்குபவர்களில் ஒருவன் குறைந்ததால் அழுக்கு உடம்புடன் இருந்த இந்த பிராமணனைப் பல்லக்குத் தூக்கும்படி செய்தான். பல்லக்கைத் தூக்கிச் சென்றவர்கள் வேகமாக செல்லவும், பரதன் மட்டும் சற்று மெதுவாக நடந்ததால் பல்லக்கு ஒரே சீராக நகர முடியவில்லை. இதனால் பரதனை மற்றவர்கள் கோபித்தனர். கோபம் கொண்ட அரசன் மிகுந்த பலமுடைய வனாகத் தோற்றமளிக்கும் நீ சிறிது தூரம் பல்லக்கை சுமந்து வந்ததில் எப்படிக் களைப்புற்றாய்?’ என்று கேட்டான். அதற்கு பரதன், 'பல்லக்கை நான் சுமக்கவில்லை, எனக்குக் களைப்பும் இல்லை, நான் பலமுடையவனும் அல்ல' என்றான். இதைக்கேட்ட அரசன் வியப்போடு, நீ பல்லக்கை சுமந்து செல்கிறாய், நீ பலமுள்ளவனாக இருக்கிறாய். இதை எப்படி மறுக்க முடியும்?' என்றான். பரதன் பதில் கூறத் துவங்கினான், “நான் யார்? நீ யார், நீ பார்த்தது என்னுடைய உடம்பும், உன்னுடைய உடம்புமே. நான் என்பது என் உடம்பும் அல்ல. நீ என்பது உன் உடம்பும் அல்ல. நம்முடைய ஆத்மாதான் நாம் யார் என்பதை அறிவிக்கும். அந்த ஆத்மாவிற்குக் களைப்போ, பலமோ எதுவு மில்லை. அந்த ஆத்மா பல்லக்கைத் தூக்கிச் சுமப்பதும் இல்லை! - இதைச் சொல்லிவிட்டு பரதன் அமைதியாகி விட்டான். வியப்படைந்த அரசன் கீழே இறங்கி அந்த பிராமணனை விழுந்து வணங்கினான். இவ்வளவு ஞானம் பெற்ற இந்த மனிதன் யார் எனத் தெரிந்து கொள்ள விரும்பினான் அரசன். உடனே பரதன் ஆத்மாவைப் பற்றிக் கூறினான். ஒவ்வொரு பிறப்பிலும் ஒர் உடம்பிலிருந்து மறு உடம்பிற்குச் செல்லுகின்ற இந்த ஆத்மாவிற்கு அழிவே கிடையாது. இதுவே ஜீவாத்மா எனப்படும். எங்கும் வியாபித்