பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு ) தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

கொண்டார் ஐயனாரிதனார். வெட்சித்திணையையும் அதன் துறைகளையும் சேர்த்துத் தொகைப் படுத்தும் முறையில் அமைந்தது,

'லுெட்சி வெட்சிய வம் விரிச்சி செலவு வேயே புறத்திறை ஊர் கொலை ஆகோள் பூசன்மாற்றே புகழ் சுரத்துய்த்தல் தலைத்தோற்றம்மே தந்துநி ை பாதி டுண்டாட் டுயர் கொடை புலனறி சிறப்பே பிள்ளை வழக்கே பெருந்து டி நிலையே கொற்றவை நிலையே வெறியாட் டுணப்பட எட்டி எண் டு ஏனை நான்கொடு தொகைஇ வெட்சியும் வெட்சித் து ைத யு மாகும்’ எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைச் சூத்திரமாகும். இதன்கண் படையியங்கரவம் முதல் கொடையிறாக வெட்சித் திணைக்குரியவாகத் தொல்காப்பியனார் குறித்த பதினான்கு துறைகளும் அவற்றையடுத்து மறங்கடைக்கூட்டிய துடிநிலை, கொற்றவை நிலை என்னும் இரு துறைகளும் வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும்' எனப் பின்வரும் தொல்காப்பிய நூற்பாவிற் குறிக்கப்படும் வெறியாட்டு என்னுந் துறையும் ஆகப் பதினேழு துறைகள் இடம்பெற்றுள்ளன. இவையேயன்றிப் புலனறி சிறப்பு பிள்ளை வழக்கு எனப் புதிய துறைகள் இரண்டினையும் சேர்த்து வெட்சித்திணைத் துறைகள் பத்தொன்பதாக ஐயனாரிதனார் விரித்துரைத்துள்ளார்.

வேம் முனை நிலை புணர்த்தியோர்க்குத் தம்மினுமிகச் சிறப்பீந்தன்று: எனவரும் புலனறி சிறப்பும்,

'பொய்யாது புள் மொழிந்தோர்க்கு வையாது வழிக் குரைத் இன்று' எனவரும் பிள்ளை வழக்கும்,

"கவர்கனைச் சுற்றம் கவர்த்த கன நீரை அவரவர் வினை யின் அறிந்திந்தன்று" என அவர் கூறும் பாதீடு என்ற துறையிலேயே அடங்குவன் என்பது ஐயனாரிதனார் தரும் இலக்கணக் கொளுக்களையும் உதாரண வெண்பாக்களையும் ஒப்பு நோக்குமிடத்து நன்கு புலனாதல் காணலாம்.