பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 பதினெண் புராணங்கள் பாதாமியில் மேலைச் சாளுக்கியர்கள் வடிவமைப்பில் ஒரு வராக அவதாரச் சிற்பம் இருக்கிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். வராக வடிவம் ஆபரணங்களை அணிந்த ஆண் வடிவில் வராகத்தின் தலை பொருந்தியது போல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வராக உருவத்திற்கு நான்கு கைகள் உள்ளன. அவற்றில் முறையே சங்கு சக்கரம் அமைந்துள்ளன. மூன்றாவது கை தொடையின் மீது வைக்கப்பட்டுள்ளது. நான்காவது கை பூமிதேவியை தாங்கிக் கொண்டிருக்கிறது. சேஷன் வராகத்தின் பாதத்தில் அமர்ந்திருக்கிறது. இதே வடிவுடன் எட்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம் ஒன்று எல்லோராவில் உள்ள தசாவதாரக் குகையில் அமைக்கப் பட்டுள்ளது. விஹார என்னும் கிராமம், வடக்கு குஜராத்தில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, வராக சிற்பம் உள்ளது. இச் சிற்பம் மனித உடலைப் பெறாமல், ஒரு பன்றியின் உடலமைப்பையே பெற்றுள்ளது. வராக உருவம் பொருந்திய நாணயங்கள் பல இங்கு கண்டு எடுக்கப்பட்டுள்ளன. யக்ளு வராகம் என்று ஒன்று உண்டு. பூமி, நாராயணன் பற்றிய மந்திரங்களைச் சொல்ல, பூமியைக் கடலினின்று காப்பாற்றிக் கொண்டுவர என்ன உருவம் எடுப்பது என்று விஷ்ணு யோசித்தார். முடிவில் யக்ஞ வராக உருவம் எடுக்க முடிவெடுத்தார். இந்த அவதாரம் பற்றி வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், பிரம்ம புராணம், பத்ம புராணம், மச்ச புராணம் ஆகியவற்றில் உள்ள பாடல்கள் குறிப்பிடு கின்றன. வராக புராணத்தில் இவை காணப்படவில்லை. யக்ளு வராகம் என்ற இந்தக் கருதுகோளில் யக்ஞம் என்ற சொல் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்யும் மாபெரும் மூல ஆற்றலைக் குறிப்பதாகும். வராகம் என்பது குழப்பம்,