பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழ் பயிற்றும் முறை

பாவங்களை யெல்லாம் இலக்கியம்தான் நுட்பமாக விரித்துக் காட்டும். எதிர்கால் வாழ்வை அமைக்கக் கடந்தகால வாழ்வு பெரிதும் துணைபுரியுமாதலால், தாய்மொழி இலக்கியங்களின் மூலம் அதைத் தெளிவாக அறிந்து, கொள்ள வேண்டும்.

மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உண்டாவதற்குத் தாய்மொழிப்படிப்பு மிகவும் இன்றியமையாதது. எல்லா மக்களும் தத்தம் தாய்மொழியைச் சிறப்பித்துப் பேசுதல் இயல்பெனினும், எம்மொழியும் பெருத சிறப்பினத் தமிழ் மொழிதான் பெற்றிருக்கின்றது. மொழியை இறையுடன் இயைபுபடுத்திப் பேசும் வழக்கம் நம் நாட்டில்தான் உண்டு.

' கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து

பண்ணு றத்தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ் 13

என்று தமிழ்மொழி போற்றப்படுகின்றது. சிவபெருமானே * நன்பாட்டுப் புலவனுய்ச் சங்கம் ஏறி தமிழ் ஆய்ந்த பெருமையைத் தேவாரம் எடுத்தியம்புகின்றது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமிழ் மொழிக்குப் பரம்பொருளே உவமை கூறியுள்ளார். ஓர் எல்லையற்ற பரம்பொருள் பல் உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து, அளித்து, அழித்தாலும் தான் யாதொரு மாறுபாடின்றி அன்றும் இன்றும் என்றும் இருப்பதுபோலவே, நமது தமிழ்மொழியும். முன்னேப் பழமொழிக்கும் முன்னேப் பழமொழியாயும் பின்னைப் புதுமொழிக்கும் பின்னப் புது மொழியாயும் பொலிகின்றது என்று பாராட்டியுள்ளார். வடமொழியும் தென்மொழியும் சிவபெருமானின் இருக்ண்கள் என்று. ஒரு புலவர் குறிப்பிடுகின்றர். இன்னுெரு புலவர்,

  • பரஞ்சோதியார்: திருவிகளயாடல் - நாட்டுச்சிறப்பு. செய்-57, . -