பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல்-நூற்பாக கூடு

பாதிடு".(அந்நிரையைக்) கூறிடுதல்.

உண்டாட்டு'-(திரைபகுத்த மறவர்) களிப்பினால் அயரும் விளையாட்டு.

கொடை(பகுத்த நிரையை வேண்டி இரப்பார்க்குக் கொடுத்தல்.

இது முன் ஈரேழாமென்ற துறை, இருவகைப்பட்டு இருபத் தெட்டாமென்கின்றது. -

(இ ள்) படை இயங்கு அரவம்-நிரைகோடற்கு எழுந்த படை பாடிப்புறத்துப் பொருந்தும் அரவமும் நிரைமீட்டற்கு எழுந்த படை விரைந்து செல்லும் அரவமும்:

பாக்கத்து விரிச்சி-நிரைகோடற்கு எழுந்தோர் போந்து விட்ட பாக்கத்துக் கங்குலின் நல்வாய்ப்புட் கேட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம்போந்தோர் கூறிய வற்றை வாய்ப்புள்ளாகக் கேட்டலும்;

புடைகெடப் போகிய செலவே-நிரைகோடற்கு எழுந்தோர் ஆண்டுநின்று மீண்டுபோய்ப் பற்றார் புலத்து ஒற்றர் உணராமற் பிற்றைஞான்று சேறலும், நிரைமீட்டற்கு எழுந்தோர் ஆண்டு ஒற்றப்படாமற் சேறலும்; .

புடைகெட ஒற்றின் ஆகிய வேயே-நிரைகோடற்கு எழுந்தோர் பகைப்புலத்து ஒற்றர் உணராமற் சென்று ஒற்றி அவ்வொற்று வகையான் அவர் உணர்த்திய குறளைச் சொல்லும், நிரை மீட்டற்கு எழுந்தோர் அங்ங்னம் ஒற்றிய ஒற்றுவகையான் வந்து ஒதிய குறளைச் சொல்லும்;

வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை-நிரைகோடற்கு எழுந்தோர் வேயுரைத்தோரிடத்துச் செய்யுஞ் சிறப்புகள் முடிந்த பின்னர் உளதாகிய நிரைப்புறத்து ஒடுங்கிய இருக்கைப் பகுதியும், நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரைப்புறத்துச் சென்று விரை வொழிந்து இருக்கின்ற இருக்கையும்;

முற்றிய ஊர்கொலை-நிரைகோடற்கு எழுந்தோர் அவர் புற ஞ்சேரியை வளைத்துக்கொண்டு ஆண்டுநின்ற நிரைகாவலரைக் கொன்று பகையறுத்தலும், நிரைமீட்டற்கு எழுந்தோர் அவ்வூரை விட்டுச் சிற்றுரைக் காத்துக்கோறலும்;

9. பாதீடு-பகுத்து இடுதல்; பங்கிட்டுக் கொடுத்தல். 10. உண்டாட்டு-வினைமுடித்த மகிழ்ச்சியால் களித்து ஆடுதல்,