பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கன 2.கடு

(இ-ள்.) கூதிர் வேனில் என்று இருபாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் - கூதிரெனவும் வேனிலெனவும் பெயர்பெற்ற இருவகைப் பாசறைக்கண்ணுங் காதலால் திரிவில் லாத மனத்தனாகி ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழில் கருதிய மரபானும்:

கூதிர், வேனில் ஆகு பெயர். அக்காலங்களிற் சென்றிருக்கும் பாசறையாவது தண்மைக்கும் வெம்மைக்குந் தலைமைபெற்ற காலத்துப் போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துப் போந் திருத்தல். இக் காலங்களிற் பிரிதல் வன்மையின் இது வென்றியா யிற்று. தலைவிமேற் காதலின்றிப் போரின்மேற் காதல்சேறலின் ஒன்றியென்றார். இக் காலத்துச் சிறப்புப்பற்றி இரண்டையும் ஒதினாரேனும் ஒர்யாட்டை எல்லை இருப்பினும் அவற்று வழித் தோன்றிய ஏனைக் காலங்களும் இரண்டாகி அவற்றுள் அடங்கு மென்பது ஆசிரியர் கருத்தாயிற்று.

'வினை.வயிற் பெயர்க்குந் தானைப் புனைதார் வேந்தன் பாசறை யேமே' (அகம்-அச)

எனத் தலைவியை நினைவன வாகைக்கு வழுவாம். அகத்திற்கு வழு வன்றென்றற்கு மரபென்றார். ஏனைய காலங்களாற் பாச றைப் பெயர் இன்றென்றற்கு இரண்டானும் பெயர் கூறினார். இங்ங்னங் கூறவே முற்கூறிய துறைபோலத் தொடர்நிலைப் படுத்தலின்றாய் இதனானே பலவாகி ஒருதுறைப்படுத்தலும் இன்றாயிற்று.

இனி இருத்தற்பொருண் முல்லையென்பதேபற்றிப் பாசறைக் கண் இருத்தலாற் பாசறைமுல்லையெனப் பெயர் கூறுவாரும் உளர். *

முதலாக முற்கூறப்பட்ட திணைகளுக்குச் சொல்லப்பட்ட துறைகளே போல ஒன்றன்பின் ஒன்றாக அடுத் தடுத்துத் தொடர்ந்து நிகழுந்துறைகளாகத் தொடர்பு படுத்துக் கூறாது.

(பாடம்) 1 ஏனைய காலங்கள் பாசறைப் பெயராதலி னென்றற்கு இரண்

1.ானும் பெயர் கூறினார்’

2. பாசறை முல்லை எனப் பெயர் கூறுவார் இன்னாரென்பது தெரிய வில்லை. இருத்தல் உரி. பொருள் தலைவிக்கும், பிரிதல் உரிப்பொருள் த ைல வற்கும் வகுத் துரைத்தல் மரபாதலின் அதற்குமாறாக இருத்தலைத் த ைல வ ற் குரியதாகக் கொண்டு தலைவியைப் பிரிந்திருக்கும் பாசறையிருப்பினைப் பு: சறை முல்லை எனப் பெயர் கூறுதல் பொருத்த மு ை- பதன்றாம்.