பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உக 2.5 க்

இளம்பூரணர் உரையோடு மாறுபடுவதுடன், தொல்காப்பியர் கருத்து ஆகாமையும் சிறிது சிந்திக்கத் தெளிவாகும்.

1. முதலில், தாம் கருதிய ஆறுவகை” யினை இந்நூலார் யாண்டு எவ்வாறு சுட்டினாரென்பதை இரண்டு உரைகாரருமே விளக்கினாரிலர். தாம் கூறக்கருதிய தொகைப்பொருள் இசை யெனத் தாமே வகைகட்டி விளக்காமல், உரைப்பார் உரைக்கும் வகையெல்லாம் சென்று அமையச் சூத்திரிப்பது இலக்கண நூல் நோக்குக்கும் தொல்கா பியர் சொற்போக்குக்கும் பொருந்துவ தன்று. இந்நூலார் தாமே வரையறை செய்திலரெனில், அஃது அவர் நூலைக் கற்பவரை மயங்க வைக்கவும் மாறுகூறவும் இடந்தரும். இழுக்காய் முடியும் அவர் கூறும் அறுவகையினை அவர் நூலி லிருந்தே கண்டு தெளியாமையானே, உரைகாரர் பலரும் பலவாறு தத்தம் மனம்போன வாறெல்லாம் மயங்கி மாறுபடக் கூறற்கிடனா யிற்று. இதனாலன்றே நச்சினார்க்கினியர் ஈங்கு அறுவகையினைப் பரவும் வகையாக்காமல் பரவப்படும் செயற்கைக் கடவுட் போலி களாம் தேவர்-பார்ப்பார்-பசுமைழை-மன்னர் உலகு என்றெண்ணி னான். இதற்கு மாறாக இளம்பூரணர் ஈண்டு அறுவகையை வணங்கப் பெறும் பொருள்களாகக்காமல் வணக்கவகைகள் ஆறெனக் கொண்டு, கொடிநிலை கந்தழி வள்ளி புலவராற்றுப் படை புகழ்தல் பரவல்' என்று கூறுவர். கற்றுவல்ல இருபேருரை காரர். இதற்கு இவ்வாறு வெவ்வேறு பொருள் தம்முள் முரணிக் கூறுவரேல், மற்றையோர் உண்மை துணிவதெப்படிக் கூடும்? இவ்வாறு பலரும் பலவாறு கூற இடம்வைத்துத் தெளிவின்றி மயங்குமாறு தொல்காப்பியர் சூத்திரியாரென்பது ஒருதலை. அவர் தேர்ந்து தெரிக்க நுதலிய பொருளை நுவலும் இச்சூத்திரத்து அறுவகைகளை அவர் நூலிற் கண்டு தெளிவதே கற்பவர் கடனாகும்.

2. இனி, நச்சினார்க்கினியர் உரையில், நேரே பராவப்படும் பிறப்பு வகையால் இயற்கைத் தேவராவார். வேறு; தேவராய்ப் பிறவாவிடினும் வைதிகர்வாய்ச் சிறப்புவகையால் தாம் பெறும் வணக்கத்தை மெய்த்தேவர்.பால் உய்க்கும் பொய்த்தெய்வப் போலிகள் வேறு ஆறு எனக் கூறப்படுகிறது. எனவே, இவ்வுரை அசலும் படியுமான தெய்வப் பகுதிகளிற் சென்று சேரும் வணக்க வகையெல்லாம் ஒருங்கு தொகுத்து இச்சூத்திரங் கூறவேண்டுவது ஏழு வகையாகவும், இந்நூலார் சூத்திரத்தில் அறுவகையென மறந்து கூறினரெனத் தொல்காப்பியரைப் பழித்தலாகும்.