பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கக் 经一盘一呜

னேன் ஆகக் கடவேன் எனக் கூறிய துன்னற்கு அரிய சிறப்பினை யுடைய வஞ்சினக்காஞ்சியும், துணிவுபற்றி ஆகியர் என இறந்த காலத்தாற் கூறினர் i

இன்நகை மனைவி போய் புண்ணோன் துன்னுதல் கடிந்த' தொடாக் காஞ்சியும். இனிய நகையார்ந்த மனைவி பேய் புண்ணோனைக் கிட்டுதலைக் காத்த தொடாக்காஞ்சியும்.

நீத்த கணவன் தீர்த்த வேலின் பெயர்த்த மனைவி ஆஞ்சி யும்’-தன்னை நீத்த கணவன் விடுத்த வேலினானே மனைவி தன் உயிரையும் பெயர்த்த ஆஞ்சியும்.

நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலும்’-ஒத்து மாறுபட்டுத் தன் மேல் வந்த வேந்த னொடு தன் தொல்குலத்து மகட்கொடைஅஞ்சிய மகட்பாற் காஞ்சியும்,

கொண்டோன் தலையொடு முலையும் முகனும் சேர்த்தி முடிந்தநிலை*யொடு தொகைஇ ஈர் ஐந்து ஆகும் என்பதன்னைக் கொண்டான் தலையொடு தன்னுடைய முலைகளையும் தம்முகத் தையும் சேர்த்தி இறந்த நிலையும் கூடிப் பத்தாகும் என்பர் சிலர்.

பேர்.இசை மாய்ந்த மகனை சுற்றியசுற்றம் மாய்ந்த பூசல் மயக்கமும்’-பெரிய இசையையுடையவனாய் மாய்ந்தவனைச் சுற்றிய சுற்றத்தார் அவன் மாய்ந்தமைக்கு அழுத மயக்கமும். (மகன்-ஆண்மகன்.)

1. புண்ணோற்று ன்னுதல் கடிந்த என்பது புண்ணோனைத் துன்னுதலைக் என விரியும். புண்ணோன்-போரிற் புண்பட்ட வீரன். துன்னுதல்-நெருங்கு தல். கடிதல்-விலக்குதல். -

2. நீத்த கணவற்றிர்த்த வேலிற் பேர்த்த மனைவி ஆஞ்சி என இத் தொடரைச் சந்தி பிரியாத நிலையிற் கொண்டு நோக்கினால்தான் இதன் பொருள் உள்ளவாறு விளங்கும். போர்கருதித் தன்னைப் பிரிந்து சென்ற கணவனது உயிரைப் போக்கிய வேலினாலேயே அவன் மனைவி தன்னுயிரையும் போக்கிய ஆஞ்சிக் காஞ்சியும்’ என்பது இத்தொடரின் பொருளாகும். இப்பொரு ளுக்கு எற்ற இலக்கியமாக இளம் பூரணர்காட்டிய வெண்பாமாலைப் பாடல் அமைந்திருத்தலால் இதுவே அவருரையின் கருத்தாகக் கொள்ள வேண்டியுளது. பெயர்த்த’ என்பது எதுகை நோக்கிப் பேர்த்த’ எனத் திரிந்தது. பெயர்த்தல்ட அப்புறப்படுத்தல், ஈண்டுத் தன் உடம்பி னின்றும் உயிரைப்போக்குதல் என்ற பொருளில் ஆளப் பெற்றது.

3. மகட்பாடு-மகளை மணஞ்செய்து கொடுத்தல்,

மகட்பால்-மகட்பாற் காஞ்சி. கொண்டோன் தன்னை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட

கணவன்,

4. தலையொடுமுடிந்த நிலை எனவே இத்துறையினை வழங்குவர் ஐயனாரிதனார் .

5. பேரிசை மாய்ந்த மகனை என்ற தொடரில் மகன் என்பது வீரன் என்ற பொருளில் ஆளப் பெற்றது; முறை ப்பெயரன்று.