பக்கம்:ஊரார்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6


ஆகாசத்தில் வெகு உயரத்தில் விமானம் பறக்கும் சத்தம், சாமியார் அண்ணாந்து பார்த்துவிட்டு, "குமாரு, நாம் ரெண்டு பேரும் ஒரு தடவை ப்ளேன்லே போவோம் வாரியா?" என்று கேட்டார்.

"எந்த ஊருக்கு?”

"சிங்கப்பூருக்கு?"

"அங்கே போய்?...”

"டேப் ரிக்கார்டரு, நைலான் கயிறு...”

"கயிறு எதுக்கு?”

"கட்டில் பின்ன?”

"அப்புறம்?...”

"பைனாகுலர், ரிஷ்ட் வாட்ச், பிஸ்கோத்து, சாக்குலெட்டு, சாப்பாட்டு ஜாமான்.”

எனக்கு?

"உனக்குதாண்டா அவ்வளவும், சட்டை, நிஜார், புக்ஸுங்க..."

"எனக்குத்தான் படிக்கத் தெரியாதே!"

"உங்க மாமன் கிட்டே சொல்லி படிக்க வைக்கச் சொல்லு.”

"அவர் மாட்டாரு."

"ஏன்?"

"எனக்கு அம்மா இல்லே, அப்பா இல்லே. நான் ஒரு அனாதைப் பையன்.அவர் எனக்குச் சாப்பாடு போட்டு வளக்கறாரே, அது போதாதா?"

"பைத்தியம். நீ அனாதை இல்லேடா! நான்தான் அனாதை. உனக்கு மாமன் இருக்கான். பணக்கார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/6&oldid=1232824" இலிருந்து மீள்விக்கப்பட்டது