பக்கம்:தாய்லாந்து.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஸ்ரீ.வே. சோகமாக, எதையோ பறிகொடுத்தவர் போலக் காணப்பட்டார்.

“என்ன ஆச்சு உமக்கு? கல்லறைச் சோகமா?”

“இல்லை; அந்த ஸ்வீட் புளியம்பழத்தில் ஒரு கிலோ வாங்கி வராமல் போய் விட்டோமே என்ற சோகம்தான்.”

“உங்களுக்கு அந்தப் பழக்கடை அழகியை இன்னொரு முறை பார்க்க வேண்டும். அதற்குப் புளியம்பழம் ஒரு சாக்கு. அதுதானே!” என்றேன்.

லகப் போரின் போது போர்க் கைதியாகப் பிடிபட்ட ஜார்ஜ் வோகஸ் என்ற டச்சு ராணுவ வீரர் பின்னொரு சமயம் பாங்காக் ரோட்டரி கிளப் விழாவொன்றில் பேசியிருக்கிறார். அந்த உரையிலிருந்து சில வரிகள்:

ன்னையும் என்னுடைய தந்தை, என் சகோதரர்கள் எல்லோரையும் ஜப்பானிய ராணுவம் 1942 மார்ச் மாதம் எட்டாம் தேதியன்று சிறைபிடித்தது. நாங்கள் அப்போது ஜாவா தீவில் இருந்தோம். எங்கள் ராணுவத்திலும் கிட்டத்தட்ட அறுபதாயிரம் வீரர்கள் இருந்தனர். ஏதோ புற்றீசல் கிளம்பியது போல லட்சக்கணக்கில் இந்த ஜப்பானியர் சின்னச் சின்ன சைக்கிள்களில் எங்களை நோக்கி வந்தார்கள். இந்தக் ‘குள்ளர்கள்’ ஏன் எங்களைக் கைது செய்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

நானும் என்னைப் போன்ற போர்க் கைதிகளும் கடல் வழியாக முதலில் சிங்கப்பூர் சிறைச்சாலைக்குச் கொண்டு போகப்பட்டோம். பின்னர் அங்கிருந்து காஞ்சனபுரிக்குக் கால்நடையாகவே போய் சேர்ந்தோம்.

தினமும் இரவில் நடை. இதுபோல் பன்னிரண்டு இரவுகள் நடந்தோம். பகல் நேரத்தில் ஒப்புக்குக் கொஞ்சம் ஓய்வு எடுக்க அனுமதித்தார்கள்.

க்வாய் நதியோரம் பர்மா எல்லைவரை போர்க் கைதிகளின் முகாம்கள் நிறுவப்பட்டிருந்தன. ஒரு முகாமைக் கட்டி முடிக்க இருநூறு கைதிகள் நியமிக்கப்பட்டார்கள். மூங்கில் கழிகளும் மரத்துண்டுகளும்தான் எங்கள் குடியிருப்புக்கான சாதனங்கள்.

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/27&oldid=1075197" இலிருந்து மீள்விக்கப்பட்டது