பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல்-நூற்பாக 历_活。

புறப்பொருள் வெண்பாமாலையாசிரியர் வெட்சியாவது சென்று இகல்முனை ஆதந்தன்று எனவும் கரந்தையாவது "தலைக்கொண்ட நிரை பெயர்த்தன்று எனவும் ஆதருதலையும் பெயர்த்து ஒம்புதலையும் இருவேறு தொழில்களாகக் குறித் தமைக்கு ஆ தந்து ஓம் பல்’ எனவரும் தொல்காப்பியத் தொடரிற் குறிக்கப்படும் தருதலும் ஒம்புதலும் ஆகிய இருவேறு வினைகளே காரணமாதல்வேண்டும். மலையாகிய குறிஞ்சித் திணைப்புறம் நி ைகோடலும் நிரைமீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறிபெறுதலும் என் வரும் இளம்பூரணர் உரையினைக் கூர்ந்து நோக்குங்கால், நிரை கவர்தலாகிய வெட்சிக்கு மறுதலைத் தொழில் நிரைமீட்டலாகிய கரந்தை என்பதும், நிரைகவரச் சென்றோர் சூடும்பூ வெட்சிப் பூவாதல் போல நிரைமீட்டற்றொழிலை மேற்கொள்ளுவோர் குடும் பூ கரந்தையாதலின் இத்தொழில் கரந்தை' எனப் பெயர் பெற்றதென்பதும் வெட்சியும் கரந்தையும் ஆகிய இவ்விருவேறு செயல்களும் குறிஞ்சித் திணைப்புறம் என ஒரு திணையாகவே வழங்கப்பெறும் என்பதும் இனிது புலனாதல் காணலாம்.

3. படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி

புடைகெடப் போகிய செலவே புடை கெட ஒற்றின் ஆகிய வேயே வேய்ப் புறம் முற்றின் ஆகிய புறத்து இறை முற் றிய ஊக் கொலை ஆகோள் பூசல் மாற்றே நோயின்று உய்த்தல் நுவல் வழித் தோற்றம் தந்து நிறை பாதீடு உண்டாட்டுக் கொடையென வந்த ஈரேழ் வகையிற்று ஆகும். இளம்: இது, வெட்சித் துறையாமாறு உணர்த்துதல் நுத லிற் று. (இ-ஸ்) படையியங்கு அரவம் முதலாகக் கொடை ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு துறையை உடைத்து வெட்சித்திணை.

வெட்சியென்பது அதிகாரத்தான் வந்தது. படை இயங்கு அரவம்-(நிரைகோடல் கருதிப்) படையெழும் அரவம்.

(பாடம்) நுவலுழித்.

1. அதிகாரமாவது, ஒருபொருளைக்குறித்து விளக்க எடுத்துக் கொண்டு அதனை முறைமைப்படவிரித்துரைக்கும் பகுதி. 'வந்த ஈரேழ்வகையிற்றாகும் : என இந் நாற்பாவில் வரும் பயனிலைக்கு எழுவாயாக மேலைச் சூத்திரத்தில் வந்த வெட்சியென்பதனை வருவித்துரைத்தமையின் வெட்சியென்பது அதிகாரத் தான் வந்தது என்றார்.”