பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-டு శ్రీశ)

யாட்டென்று இளம்பூரணர் உரை கூறுவர். இதில் எழுந் தோனை' என்றதனால் இறவாமை தெளியப்படும்; இறந்தானை எழுந்தோனென்பது மரபன்று. அன்றியும் போரில் இறந்தவர்க்குத் துறக்க நாடு அருளுபவர் அவனைக் கொன்ற பகைவராவரன்றி இறந்த பொருநனின் வேந்தன் ஆகான். புறந்தாராது பொருது களத்துயிர் கொடுத்தவனைத் தமரும் பகைவரும் பாராட்டிப் பரிந்திரங்குவர். அவன் இறந்தமைக்கு மகிழ்வது நன்மக்களியல் பன்று. ஈண்டு மகிழ்ந்து நாடவர்க்கருளிய பரிசு கூறுதலாலும், அஃதுரையன்மை ஒரு தலையாம்.

வன்கண் மற மன்னன் வான்மலைந்து மேம்பட்ட புன்தலை யொன் வாட் புதல்வர்கண்-டன் புற்றுக் கான் கெழு நாடு கொடுத்தான் கருதEர்க்கு வான்கெழு நாடு வச.”

என வரும் பழம்பாடல் இளம்பூரணர் உரையை மறுத்துப் பகைவர் வானொடு பெற வென்றுவந்தவர்க்குப் பரிசிலாய் மன்னன் மண் கொடுக்கும் பரிசே குறிப்பதறிக}

(16 முதல் 21) காட்சி-பொருது வீழ்ந்தார்க்கு நடுதற் பொருட்டுத் தக்கோர் கல்லைத் தேர்ந்து காணல்; கால்கோள்தேர்ந்து கண்ட கல்லைக் கொணர்தல். நீர்ப்படை-விழாவொடு அக்கல்லைத் தூய நீரால் குளிப்பித்தல்; நடுதல்-பிறகு அதனை எடுத்து நடுதல்; சீர்த்தகு மரபிற் பெரும்படை-சிறந்த முறையில் நாட்டிய கல்லுக்கு மிக்க பலியுணவு படைத்தல்; வாழ்த்தல்அவ்வாறு கடவுளேற்றிப் பலியூட்டிய அக்கல்லைப் பழிச்சுதல்; என்று இரு மூன்று வகையில் கல்லொடு புணர-இவ்வாறு அறு திறப்படும் நடுகல் துறைகளோடு சேர்ந்து;

(இதில் புணர்ந்து என்னும் எச்சம் புணர என நின்றது. அன்றி, நின்றாங்கே கொண்டு, சேர எனப் பொருள் கொள்ளினும் அமையும்.)

இவையாறும் நடுகல் வகைகளாய் விழவொடு ஒடுக் கொடுத்துப் பிரித்து இரு மூன்று வகையிற் கல்லொடு புணர என எண்வேறு கொடுத்துத் தொகுக்கப்பட்டன .

போரில் புகழொடு பட்டானைப் பாராட்டிக் கல் நட்டு விழாவொடு பழிச்சுதல் பண்டைத் தமிழர் வழக்காகும். பெருங் களிற்றடியில் எனத் தொடங்கும் புறப்பாட்டில் (263)