பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கக படுக

தேவர்க்கும் உள்ள நிலையாமையே காஞ்சிச் சிறப்புடைத்தாகக் கூறப்படுவது; ஏனை அஃறிணைப்பகுதிக்கண்ணுள்ள நிலையாமை காஞ்சிச்சிறப்பன்று என்றுணர்க. (உச)

பாரதியார்

கருத்து - இது, காஞ்சித்துறை விழுப்பவகை பத்தும் விழுமவகை பத்துமாக இருபதாமாறு கூறுகிறது.

பொருள் :- (1) மாற்றருங்கூற்றஞ் சாற்றிய பெருமையும்யார்க்கும் விலக்கொணாது இறுதிதரும் கூற்றினாற்றல் கூறும் பெருங்காஞ்சியும்;

2. கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்இளமை கழிந்த முதியோர், மற்றையவர்க்கு அப்பரிசு சுட்டி யறிவுறுத்தும் முதுகாஞ்சியும்;

3. பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தினானும்-தகுதி யொடுபட்ட பரிசு கருதி வாய்த்த புண்ணைக் கிழித்து உயிர் துறக்கும் மறக்காஞ்சியும்.

'பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக் கொன்று முகத்தேய்ந்த எஃகந் தாங்கிச் சென்று களம் புக்க காளை தன்னொடு முன்மலைந்து மடிந்த வோடா விடலை நடுகல் நெடுநிலை நோக்கி, ஆங்குத் தன் புண்வாய் கிழித்தனன் புகழோன்...... இவன்போ லிந்நிலை பெறுக யானெனவே."

இதில், முன் ஒருவன் இறந்து கல்லான நிலையைப் போரில் புண்பட்ட ஒருவன் கண்டு, யாக்கை நிலையாமையை நினைத்துத்: தன் புண்ணைக் கிழித்து உயிர் துறந்த தறுகண்மை கூறப்படுதல் அறிக.

4. ஏமச் சுற்றமின்னிறப் புண்போற் பேஎயோம்பிய பேஎய்ப் பக்கமும்- பேணும் சுற்றத்தா ரின்மையால் புண்பட்டவளைப் பேய்பேனும் பேய்க் காஞ்சியும்;

5. இன்னனென் றிரங்கிய மன்னையானும்-இன்ன பரிசு டையா னென்று இறந்தபின் ஒருவனை அயலோர் பரிந்து கூறும் மன்னைக் காஞ்சியும்,

6. இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்-இது செய்யத் தவிர்ந்தால் இன்ன