பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

విO 2. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

இது தண்ணடை பெறுகின்றது. சிறிது சுவர்க்கம் பெறுதல் நன்று என்று நெடுமொழி கூறியது.” போர்க்களம் புக்கு நெடு மொழி கூறலும் ஈண்டு அடக்குக.

பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்-பகைவேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்தின பேராண்மை செய்யும் பகுதியும்;

உதாரணம் :

"மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் “கையிகந் தமருந் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி யினையோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை யெறித லொன்றோ மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய னுண்க ணோக்கிச் சிறிய கொலைமொழி மின்னுச் சிதர்ந் தனையதன் வேறிசித் திட்டு நகுதலு நகுமே.”* இஃது அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதி யாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது.

'பல்சான் நீரே பல்சான் ஹீரே

வேந்துர் யானைக் கல்ல தேந்துவன் போலான்ற னிலங்கிலை வேலே.'

(புறம்-கூ0க)

இதுவு மது. வரு விசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெரு மையானும்’-தன்படை நிலையாற்றாது பெயர்ந்தவழி விசை யோடும் வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினார்போலத் தன் மேல் வரும் படையினைத் தானே தடுத்த பெருமையும்:

8. இது தண்ணடை பெறுகின்றது சிறிது, சுவர்க்கம் பெறுதல் நன்று” என்று நெடுமொழி கூறியது”. என்று இத்தொடர் அமைந்திருத்தல் வேண்டும். தண்ண டை-மருதநிலம். நன்று-பெரிது.

9. கற்சிறை-கல்லணை, தாங்குதல்-தடுத்தல்.