பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛召称学 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

இன்னும் உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்து எனவுங் கூட்டிப் பன்னிரண்டன்கண்ணும் முற்கூறிய வெட்சித் தினை முதலியவற்றான் நிகழுந் தும்பையும் வந்துகூடப் பின் அவற்றிற்கு முரியவாய்ப் பொருந்தித்தோன்றும் பன்னிரு துறை யினையுடைத்துத் தும்பைத்திணை என்றும் பொருள் கொள்க. பொருள் இடமாகத் துறை இடத்தியல் பொருளாங்கால் ஏனைத் திணைக்கட் கூறினாற்போல ஒன்று நிகழ்ந்த பின் ஒன்று நிகழாது இரண்டு படைக்கும் பொருந்த ஒரு காலத்து இத் திணை நிகழு மென்றற்குப் புல்லித்தோன்றும் என்றார். பல்பெருங் காத மாகிய நெடுநெறியிடைத் துணிந்த இடத்தையும் துறையெனப் பலதுறை யென்பதுபோல இச் சூத்திரத்துத் துறையைத் தொகுதி டன் அறுதிகாட்டிற்றென்றுணர்க. இவ் விலக்கணம் மேல் வருகின்ற திணைகட்கும் ஒக்கும்."

பாரதியார்

கருத்து :- இது, தும்பைத்திணையின் துறை வகையும் இயல்பும் கூறுகிறது.

பொருள் :- (1-3); தானை யானை குதிரை என்ற தோனார் உட்கும் மூவகை நிலையும்-பகைவரை அஞ்சப் பண்ணும் ஆட்படை வகுப்பு, யானை நிரை, குதிரையணி எனும் முத்திற நிலைகளும்;

இதில் யானை-தானை-குதிரை (மா) என்ற மூவகை நிலையு மொருங்கு வருதலறிக. இனி, இவை தனித்தனியே வருதல் பெருவழக்கு.

4. வேன் மிகு வேந்தனை மொய்த்த வழி, ஒருவன்தான் மீண்டெறிந்த தார்நிலை அன்றியும்-வேன்மறத்தால் வீறுபெற்ற வேந்தனைப் (பகைமறவர்) சூழ்ந்து நெருக்கிய விடத்து, அவன் தானைத்தலைவன் தான் ஒருவனாய்ப் பகைவர் முன்னணியை மறித்து முறித்த தும்பைத்தார்நிலையும், அல்லாமலும்;

1. வெட்சி முதலிய தினைகளில் அமைந்த துறைகள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்துப் படிதால் முறையே நிகழ்வன. இருதிறப் படைகளும் ஒரு களத்துப் பொருதலாகிய இத்தும் பைத்தினையில் ஒன்றன்பின் ஒன்று என்ற முறையிலன்றி, இரண்டு படைகட்கும் பொருந்தப் போர் நிகழ்ச்சிகள் ஒரு காலத்து

ஒருங்கே நிகழும் என்பதற்குப் புல்லித்தோன்றும் என்றார் என்பர் நிச்சினர்; கினியர்.

2. பல்பெருங்காதமாகிய நீண்- வழியின் கண்ணே அறுதிப்படுத்திய இடத் தைத் துறை என வழங்குமாறு போல, இந் நூற்பாவிற் சொல்லப்பட்ட துறை என்பது தும்பைத்தினைக்குரியவாக நீண்டு நிகழும் போர் நிகழ்ச்சிகளை அறுதி விட்டுக் காட்டி ற்று என்பது நச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும். இவ் விளக்கம் இனி வருகின் திணைகளின் துறை கட்கும் ஏற்புடையதாகும்.