பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-டு {...

தொழிலினை மேற்கொண்ட மறவர்கள் தாம் மேற்கொண்ட போர்ச் செயலுக்கு அடையாளமாக வெட்சிப் பூவினைச் சூடிச் செல்லுதல் போலவே அவர்க்கு மாறாக நிரைமீட்டலை மேற் கொண்ட வீரர்களும் தாம் மேற்கொண்ட செயலுக்கு அடையாள மாகக் கரந்தைப் பூவினைச் சூடிச் செல்லுதல் தொன்றுதொட்டு வரும் போர்மரபு என்பார், அனைக்குரி மரபினது கரந்தை' என் றார் தொல்காப்பியனார். "நாகுமுலையன்ன நறும்பூங்கரந்தை, விரகறியாளர் மரபிற் சூட்ட, நிரையிவட்டந்து (புறநா-251) என வரும் புறப்பாடற்பகுதியும் இம்மரபினை இனிது புலப்படுத்தல் காணலாம். 'கரந்தையாவது தன்னுறுதொழிலாக நிரை மீட் டோர் பூச்சூடுதலிற் பெற்ற பெயராதலின் வெட்சித்திணை போல ஒழுக்கமன்று; "அந்தோ வெந்தை' என்னும் புறப்பாட் டினுள், "நாகுமுலையன்ன நறும் பூங்கரந்தை, விரகறியாளர் மரபிற் சூட்ட, நிரையிவட்டந்து என்றவாறு காண்க எனவரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதியும் இங்கு நினைக்கத் தகுவ தாகும்.

குறிஞ்சித் திணைப்புறம் நிரைகோடலும் நிரைமீட்டலு மாகிய தொழில்வேறுபாடு குறித்து முறையே வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறிபெறும் என்றும், வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் சூத்திரம் வெட்சிக்கு மாறாகிய கரந்தைத் திணையாமாறு உண்ர்த்துதல் துதவிற்று என்றும், அதுவும் ஆநிரை மீட்டல் காரணமாக அந்நிலத்தின்கண் நிகழ்வ தாகலின் வெட்சிப்பாற்பட்டுக் குறிஞ்சிக்குப் புறனாயிற்று” என்றும் கூறுவர் இளம்பூரணர். முன் இருபெருவேந்தர்க்கும் போர் செயத் தொடங்குதற்கரிய பொதுநிலைமை கூறிய அதி காரத்தானே புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழு ஏழும் உண்ர்த்துதல் துதலிற்று இச்சூத்திரம் எனக் கொண்ட நச்சி னார்க்கினியர் தாம் கொண்ட கருத்திற்கு ஏற்ப இச்சூத்திரத்திற்கு வலிதிற் பொருள் விரித்துரைப்பர். இந்நூற்பாவில் அவரால் வழு வெனக் குறிக்கப்பட்ட துறைகள் மறவரது மறத்தினைப் புலப் படுத்துஞ் சிறப்பினவாக அமைந்துள்ளனவேயன்றி எவ்வகை யானும் வழுவாதல் இல்லை என்பது இங்கு மனங்கொளத்தகுவ தாகும்.

மருதத்துப்புறம் எயிலழித்தலும் எயில்காத்தலுமாகிய தொழில் வேறுபாடு குறித்து முறையே உழிஞையெனவும் நொச்சி யெனவும் இரண்டு குறிபெறுதல் போன்று, குறிஞ்சிப் புறமாகிய