பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II. சங்க நூல்களில் வேங்கடம்

சென்ற பகுதியில் வேங்கடம் தமிழகத்தின் வட எல்லே என்பதையும் அதனைத் தன் அகத்தே பெற்ற தொண்டை நாடு தமிழ் நாடு என்பதையும் சங்கநூற் சான்றுகளும் பிறவும் கொண்டு தெளிந்தோம். இங்கு வேங்கடத்தைப் பற்றி வந்துள்ள பழைய நூற் குறிப்பு களைக் காண்போம். வேங்கடத்தைக் குறித்த சங்ககாலப் புலவர்

வேங்கடத்தைப் பற்றி அறிந்த புலவர் சிலர் இருக் திருக்கின்றனர் என்பது, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை முதலிய நூ ல் க ளால் அறியலாம். இவருள் மாமூலனர், கல்லாடனர், மதுரைக் கணக் காய ைர், அவர் ம்களுர் க் கீ ர ன ர், காட்ர்ே கிழார் மகளுர் கண்ணனர், தாயன் - கண்ணகுர், என் குகனர், கள்ளில் - ஆத்திரையனர் என்பவர் குறிப் பிடத் தக்கவர். இப்புலவருள் கல்லாடரும் மாமூல குரும் பாடியனவே பலவாகும். இவர் இருவரும் சிறந்த நண்பர் என்பது கல்லாட மாமூலனர்’ என்னும் தொடரால் அறியலாம்.

மாமூலனரும் வேங்கடமும்

(1) வேங்கடம் திருவிழா மிக்குடையது. அது புல்லி என்பான் காட்டகத்தது. புல்லி கள்வர் தலைவன் ; அக் கள்வர் வில்லைக் கையில் ஏந்தி யானை வேட்டை ஆடுபவர். அவர் யானைக் கொம்புகளைக் கொண்டுவந்து கள்விலை பகரும் பேரில்லங்களில் கள்ளாட்டு அயர்வர். இத்தகைய

1. கபிலபரணர் என்றாற்போல.