ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
117
எப்படியோ பிடித்துவிட்டான். அதுவும் பிடிபிடியென்று பிடித்து விட்டான்... 'இதுக்கு மேலயும் காத்திருக்கிறதுல அர்த்தமில்ல சார்... இனிமேயும் காத்திருந்தால், அவங்க நம்மள அவமானப்படுத்துறாங்களோ இல்லையோ... நம்மள நாமே அவமானப் படுத்துறதா அர்த்தம் சார்' மாவட்ட நேரு மைய அமைப்பாளர், கலெக்டரிடம் காட்ட முடியாத செல்லாக் கோபத்தை காவடி முருகனிடம் செலவாணியாக்கினார். அவனோடு நியாயம் கேட்க வந்த சக கலைஞர்கள், அவனை முன்னால் தள்ளிவிட்டு பின்னால் போனதில், அவருக்கு, திண்டாட்டமே கொண்டாட் டமாகியது.... 'இந்தா பாருப்பா... நாய் வேசம் போட்டா குலைச்சுத்தான் ஆகணும்... கலெக்டர வைச்சு நடத்துனா ஆயிரம் கஷ்டம் வரும்... ஆனா அவரு இல்லாம நடத்துனால் ஐயாயிரம் வில்லங்கம் வரும்... பேசாமல் ஒன் இடத்துக்கு போ.... சும்மா குலைக்காதே...' "என்ன சார், நாயை துரத்துற மாதிரி துரத்துறீங்க..." 'இந்தாம்மா மீரா, இந்த மாதிரி ஆளுங்கள எதுக்காகம்மா செலக்ட் பண்ற... எதுக்கும் நாளைக்கு என்னை நீ ஆபீசுல வந்து பாரு...' மீரா, அந்த அமைப்பாளரைப் பார்த்து கண்களால் கெஞ்சினாள்... காவடி முருகனைப் பார்த்து கைகளை நெறித்தாள். எம்.எஸ்ஸி. படித்த இருபத்தைந்து வயதுக் காரி... சர்க்கார் வேலைகளைப் பொறுத்த அளவில் அவள் மூப்படையாமல் இருக்க இன்னும் ஆறு மாதங்களே உள்ளன... மாதம் அறுநூறு ரூபாய் சம்பளத்தில் நேரு மையத்தில் பகுதி நேர அமைப்பாளராக அவள் சேர்வதற்குக்