பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருப்பதியில் சீகிவாசப் புத்தேரி ஒன்று தோண்டப்

பட்டது.’

12. சந்திரகிரியை ஆண்ட சாளுவ அரசர் மகன் பெயர் திருமலைதேவன். சாளுவர் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசர்.’ 2. சாளுவர் பரம்பரை

மேற்சொன்ன சந்திரகிரி ராச்சியத்தை ஆண்டுவந்த சாளுவ மரபில் வந்த நரசிங்கர் என்பவர் விஜயநகரப் போசினேக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். அவர் விஜயநகரத்தை யாண்ட இரண்டாம் பரம்பரையினர் எனப்பட்டார். அவர் காலத்தில் வேங்கடம் அடைந்த சிறிப்பு மிகுதியாகும். எண்ணிறந்த கல்வெட்டுகள் அக் காலத்தில் தோன்றின. அறச் செயல்கள் மிகுதிப்பட் டன ; திருப்பதியைச் சுற்றிப் பல கிராமங்கள் கோவிலுக் குத் தேவதானமாக விடப்பட்டன , தரிசான நிலங்களைச் சாகுபடி செய்யப் பல கால்வாய்கள் புதியனவாக வெட் டப்பட்டுப் பெயரிடப்பட்டன. புதிய மண்டபங்கள் பல இடங்களில் கட்டப்பட்டுப் பெயரிடப்பட்டன. புதிய நந்தவனங்கள் உண்டாக்கப்பட்டுப் பெயர் வழங்கப்பட்’ டன. வைணவத் துறவிகளும் வைணவப் பெரியோர் களும் திருப்பதியில் மிக்கிருந்தனர். கோவில் ஆட்சி செவ்விய முறையில் நடைபெற்றது. புதிய விழாக்கள் பெருகின. இந் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் குறிக்கப் பல கல்வெட்டுகள் தோன்றின. அவற்றை ஊன்றிப் பார்க்கவேண்டும் : புதியனவாகக் கட்டிய மண்டபங்கள், வெட்டிய கால்வாய்கள், உண்டாக்கப்பட்ட சந்தவனங் கள் முதலியவற்றுக்கு எல்லாம் வைக்கப்பட்ட பெயர்

11. Vol. II, 8. 12. History of Tiruppati, Vol. 1, p. 457.