பக்கம்:பதினாறும் பெறுக.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

41



பரம: தம்பி இளங்கோ ! இவர் என்னை பயமுறுத்துறாருடா !

இளங் : எதற்காக, எதைக்காட்டி பயமுறுத்துகிறார் ?

பரம : (அஞ்சி) வந்து. . . .வந்து....நான் என்னடா சொல்லட்டும் ?.....எப்படியடா சொல்லட்டும் ?.. . .

செல்வ : நான் சொல்லுகிறேன் . இளங்கோ ! நீ இந்தப் பெண் பேய்களைவிட்டு விலகி வந்து, என்னோட மகளை மணந்து கொள்ளணும் .இல்லேன்னா என் கடனுக்காக உங்களை கோர்ட்டிலே நிறுத்துவேன் வெளியிலே யோக்கியன் போலப்பேசிக்கிட்டு, ஒங்கப்பன் ரகசியத்திலே வைப்பாட்டியை வச்சு, பிள்ளைகளைப் பெத்துக்கிட்டிருக்கிறான். அதை ஊரறியவச்சு, மானத்தைக் கெடுப்பேன். ஒங்க குடும்ப கெளரவத்தையே காத்திலே பறக்க விடுவேன்.

இளங் : இப்படிச் சொல்லி என் தந்தையை பயமுறுத்திவிட்டீர் ! என்னை ஏய்க்க முடியாது ! உமது எண்ணம் ஒருக்காலும் கைகூடப்போவதில்லை.

செல்வ: என் பிடியிலிருந்து நீங்க ரெண்டுபேருமே தப்பமுடியாது. சமூகத்திலே மரியாதை வேணுமானா என் விருப்பப்படி நடந்தே ஆகணும்.

இளங் : இது வெறும் மிரட்டல். நாங்கள் தீராத கடன்காரருமல்ல, ஒழுக்கம் கெட்டோருமல்ல. உம்முடைய கடன் ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும். என் தந்தையின் ஒழுக்கக் கேடுபற்றிச் சொன்னீரே அந்தப் பிரச்சினையும் இன்றோடு தீர்ந்துவிட்டது.

செல்வ : எப்படித் தீர்க்க முடியும் அதை ? எத்தனை வருஷத்திய கள்ளக் காதல் தெரியுமா ?

இளங் : இதோ பாரும்! (தந்தையிடம்) தந்தையே நீங்கள் விரும்பியேற்று, பரிபாலித்துப் பாதுகாத்து, முத்தனின் உதவி பெற்று மாலதியம்மாவோடு இரகசிய வாழ்வு நடத்தினீர்கள் இது உண்மை தானே ?

பரம : (தடுமாறி) உம். . . . உண்மைதான். உண்மைதான்.

இளங் : அது வெளியே தெரிந்தால் கேவலம், என்று மறைத்ததும், அந்தப் பிள்ளைகள் உரிமை கேட்டால் என்ன செய்வது என்று அஞ்சியதும் தவறுகள்தானே இல்லையா ?

பரம : உம். . . .அது....தவறுதான் இளங்கோ.

இளங் : அந்தத் தவறுக்கு பரிகாரமாக இதோ மாலதியம்மாவை என் சிற்றன்னையாகவும், இவர்கள் பெற்ற குழந்தைகளை என் உடன் பிறப்புகளாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். இனி நாம் ஒரே குடும்பமாகச் சேர்ந்து வாழ்வோம்.

பரம : இளங்கோ நான் ஏற்றுக்கொண்டாலும்....சமூகம் இதை ஏற்குமா தம்பி ?

இளங் : ஏனப்பா ஏற்காது தாரமிழந்தவர் இளையதாரம் மணக்கிறார். கட்டுப்பாடாக வாழ்கிறார். அதைத்தான் நீங்களும் செய்தீர்கள். அச்சம், வெட்கம் காரணமாக மறைத்தீர்கள், இப்பொழுது துணிந்து வெளிப்படையாக ஏற்கிறீர்கள் ! இதிலென்ன குற்றம் ? சமூகத்துக்கு இதிலென்ன கேடு?

பரம: குததமில்லேன்ன, மனப்பூர்வமாக ஏ த் து க் கிறேன். இளங்கோ - - .