பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது கதைகளின் கதைகள்

43

பயம். ஊரில் புரட்சிக்காரன் என்று பேர் வாங்கிய நான், ‘அம்போக்கு’ என்று அடிபட்டு விடக்கூடாதோ என்ற எச்சரிக்கை. அவள் எவ்வளவோ என்னிடம் பேசிப் பார்த்தாள். நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ஒரு நாள் என்னால் இயலவில்லை. தனியாக வந்த அவளிடம், ஏதோ பேசப்போனேன். உடனே அவள் “முகரக்கட்டையயும் மூஞ்சியையும் பாரு” என்றாள். முழுக் கறுப்பனாகவும், முன் நீண்ட பற்கள் உடையவனாகவும், உள்ள நான் கோபத்தில் கண்சிவந்து, அவளைப் பதிலுக்கு திட்டிவிட்டு வந்து விட்டேன். நான்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு, இருவரும் (அரைக்கிழடுகளான பிறகு) சந்தித்தோம். அவளிடம் ‘முகரக்கட்டையை'ப் பற்றிக் கேட்டேன். உடனே அவள் ‘செல்லமாக’ சொன்னதாகச் சொன்னாள். நான் தான் அவள் காதலை புரிந்து கொள்ளாமல் திட்டிவிட்டதாக அங்கலாய்த்தாள். அன்புச்சக்தி எப்படி விபரீதமாகவும் மாறலாம் என்பதை வைத்துக் “கதிர்வராத பயிர்கள்” என்ற கதையை ‘தேவி'யில் எழுதினேன்.

பால்கணக்கு

ப்போது எனக்கு ஆறு வயதிருக்கும், இன்னும் நன்றாகவே நினைவிருக்கிறது.

என் விதவைத் தாயாருக்கு 25 வயதிருக்கலாம். அம்மாவிற்குத் திருமணமான ஆறுமாதக் காலத்திற்குள்ளேயே, அப்பா இறந்து விட்டார். நான்தான் அம்மாவின் மூத்த-கடைசி மகன். ஆகையால், அம்மா என்னை ‘படி படி’ யென்று சொன்னதும், படிக்கவில்லை என்றால் அடித்ததும், இன்னும் நினைவிற்கு