பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


16
காலக்கிழம்


ன் எழுத்தின் வெற்றிக்கு பெரும் காரணமான ‘செம்மலர்’ பத்திரிகை அக்டோபர் மாதத்திற்கு ஒரு கதை எழுதும்படி எனக்கு ஒரு கடிதம் அனுப்பியது. நானும் வழக்கம்போல் அடையார் கடற்கரையில் கடல் மண்ணை கைகளால் துழாவிக்கொண்டே சிந்தித்தேன். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆங்கிலப் பத்திரிகையில், புதிதாக விடுதலை பெற்று பொருளாதார வளர்ச்சி காணும் நாடுகளில் மக்கள் மனோபாவங்கள் எப்படியெல்லாம் மாறும் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் கற்பு, கண்டிப்பான கொத்தடிமை, பெண்ணடிமை போன்ற நில-பிரபுத்துவ நெறிகள் சிதறியடிக்கப்பட்டு, நீக்குப்போக்கான கற்பு, விழிப்புணர்வு போன்ற புதிய அம்சங்கள் தோன்றும் என்று கூறப்பட்டிருந்தது. அதோடு தொழில் ரீதியான பொருளாதார மாற்றத்தால், தனி நபர் வழிபாடு, மனோபயம், பாலுணர்வில் அதிக ஈடுபாடு இருப்பது